Friday, March 7, 2014

உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பற்றி அறிய!!!

மனிதன் ஒரு நாளைக்கு எந்த பிரச்சனையுமின்றி, ஆரோக்கியமாக வாழ குறிப்பிட்ட சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது. அதனை இந்த கால்குலேட்டர் மூலம் எளிதாக கணக்கிட்டு, தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1.வைட்டமின் பெயர் : கால்சியம்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 800mg

செயல்பாடுகள்
கால்சியம் சத்தானது உடலில் 99% எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. இது உடலில் நடைபெறும் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான ஒரு சத்து.

உணவுகள்
பால்
பால் பொருட்கள்
வெந்தயம்
முருங்கை
பச்சை இலைக் காய்கறிகள்
பீட்ரூட்
அத்திப் பழம்
திராட்சை
தர்பூசணி
தினை
எள்
மீன்
கடல் சிப்பி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவிழந்து, மூட்டு வலிகள் அடிக்கடி ஏற்படும்.

2.வைட்டமின் பெயர் : பாஸ்பரஸ்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 800mg

செயல்பாடுகள்
எலும்புகள் மற்றும் பற்களில் 80% பாஸ்பரஸ் சத்தானது உள்ளது. இந்த சத்து தான் உடலில் உள்ள pH-ன் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றை பல்வேறு வகையில் செயல்பட வைக்கிறது.

உணவுகள்
பால்
சீஸ்
உலர் பழங்கள்
சோயா பீன்ஸ்
பேரிச்சம் பழம்
கேரட்
கொய்யாப் பழம்
முட்டை
மீன்
இறைச்சி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
பாஸ்பரஸ் சத்தானது உடலில் மிகவும் குறைவாக இருந்தால், எலும்புகள், பற்கள் வலுவிழப்பதோடு, எடையும் குறையும்.

3.வைட்டமின் பெயர் : பொட்டாசியம்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 2500mg

செயல்பாடுகள்
பொட்டாசியம் செல்லுலார் திரவங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவைப்படுகிறது. மேலும் இது இரத்தத்தின் pH அளவை சீராக்க உதவுகிறது.

உணவுகள்
பழங்கள்
பால்
பூண்டு
முள்ளங்கி
உருளைக்கிழங்கு
இறைச்சி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் தசைகள் பலவீனமடைந்து, கடுமையான வலிகள் ஏற்படுத்துவதோடு, பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.

4.வைட்டமின் பெயர் : சோடியம்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 2500mg

செயல்பாடுகள்
சோடியமும் உடலில் செல்லுலார் திரவங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதிலும் இந்த சோடியம் 30-40 சதவீதம் எலும்புகளில் உள்ளது.

உணவுகள்
உப்பு
பால்
பீட்ரூட்
கேரட்
முள்ளங்கி
முட்டை
இறைச்சி
மீன்

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
சோடியம் குறைபாட்டினால் தலைவலி, குமட்டல், தசைகளில் வலி போன்றவை ஏற்படும்.

5.வைட்டமின் பெயர் : இரும்புச்சத்து
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 10mg

செயல்பாடுகள்
இரத்தத்தில் உள்ள சிவப்பணுவில் 70% இரும்புச்சத்தும், 26% கல்லீரல் மற்றும் எலும்புகளில் உள்ளன. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், செல்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவோ அல்லது கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றவோ முடியாது.

உணவுகள்
வெந்தயம்
புதினா
பச்சை இலைக் காய்கறிகள்
எள்
தினை
உளுத்தம் பருப்பு
பாசிப்பயிறு
சோயா பீன்ஸ்
பேரிச்சம் பழம்
மாம்பழம்
முட்டை
இறைச்சி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
அனீமியா என்னும் ஞாபக மறதி அடிக்கடி ஏற்படும்..

6.வைட்டமின் பெயர் : சல்பர்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 300mg

செயல்பாடுகள்
உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு சல்பர் மிகவும் அவசியமான ஒரு பொருள்.

உணவுகள்
பீட்ரூட்
முட்டைகோஸ்
முள்ளங்கி
பூண்டு
வெங்காயம்
பால்
இறைச்சி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
சல்பர் குறைபாட்டினால் உடலின் சில வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகள் தடுக்கப்படும்.

7.வைட்டமின் பெயர் : மக்னீசியம்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 350mg

செயல்பாடுகள்
உடலில் உள்ள எலும்புகளில் 50% மக்னீசியமும், 50% செல்களிலும் உள்ளன. இவை நிறைய நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. சொல்லப்போனால், உடலில் நடைபெறும் பெரும்பாலான செயல்களில் மக்னீசியம் தான் பயன்படுகிறது.

உணவுகள்
பால்
செரில்
பச்சை இலைக் காய்கறிகள்
உலர் பழங்கள்
இறைச்சி

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
இந்த குறைபாடு இருந்தால், எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் பலவீனமடையும். சில சமயங்களில் இதயத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

8.வைட்டமின் பெயர் : குளோரின்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 2000mg

செயல்பாடுகள்
இந்த சத்தும் சோடியத்தை போன்றே, ஒரு சில செல்லுலார் திரவங்களின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது செரிமான மண்டலத்தில் இருக்கும் திரவங்களிலும் அவசியம் தேவைப்படுகிறது.

உணவுகள்
உப்பு
பால்
கேரட்
உருளைக்கிழங்கு
பசலைக் கீரை
முட்டைகோஸ்
தக்காளி
வாழைப்பழம்
பேரிச்சம் பழம்
முட்டை
இறைச்சி
உப்பு நீர் மீன்கள்

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
இதன் குறைபாட்டால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலுவிழக்கும். மேலும் செரிமானப் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

9.வைட்டமின் பெயர் : ஐயோடின்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 0.14mg








செயல்பாடுகள்
இந்த சத்து தைராய்டு சுரப்பிற்கு பெரிதும் துணைபுரிகின்றது.

உணவுகள்
கடல் உணவுகள்
பச்சை இலைக் காய்கறிகள்
ஸ்ட்ராபெர்ரி
பால்
தயிர்
சீஸ்

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
ஐயோடின் குறைபாட்டினால் தைராய்டு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

10.வைட்டமின் பெயர் : ஜிங்க்
தினமும் உடலுக்கு வேண்டிய அளவு : 35mg

செயல்பாடுகள்
உடலில் உள்ள 300 வகையான நொதிகள் செயல்படுவதற்கு ஜிங்க் மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இரத்தம் உறையாமலிருப்பதற்கும், தைராய்டு சுரப்பி சரியாக இயங்குவதற்கும் உதவியாக உள்ளது.

உணவுகள்
கடல் சிப்பி
நண்டு
மாட்டுக்கறி
கடல் உணவு
டோஃபு
தானியங்கள்
பருப்பு வகைகள்
நட்ஸ் மற்றும் விதைகள்
வேர்க்கடலை
வேர்க்கடலை வெண்ணெய்
பால்
தாய்ப்பால்

குறைபாட்டிற்கான அறிகுறிகள்
உடலில் ஜிங்க் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வயிற்றுப்போக்கு, பசியின்மை, சுவை தெரியாமல் இருப்பது போன்றவை ஏற்படும். சில சமயங்களில் லேசாக மறதி கூட ஏற்படும்.

Thank you : http://tamil.boldsky.com
தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval