Thursday, April 3, 2014

முருங்கை மரத்தின் பயன் அறிவோம் வாருங்கள்!

முருங்கை மரம்  
File:Ethiopia - Mature Moringa stenopetala tree - March 2011.jpg
மரம் முழுவதும் மருத்துவ குணம்
கொண்ட முருங்கை

பச்சைக் கீரைகளில்
எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள்
இருக்கின்றன. நாம்தான்
அதனை முறையாகப்
பயன்படுத்துவதில்லை.
கீரை வகைகளை உணவோடு சேர்க்கச்
சொல்லி சும்மாவா சொன்னார்கள்
நம் மூதாதையர்கள்.
கீரை வகைகளில் இரும்புச்
சத்து கணிசமாக உள்ளது.அந்த
வகையில் முருங்கைக் கீரையின்
பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும்
மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ
குணம் கொண்டது.
முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல்
சூடு தணியும்.வெப்பத்தின்
காரணமாக உடலில் ஏற்படும் மந்தம்,
உட்சூடு, கண்நோய்,
பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும்
குணம் படைத்தது முருங்கைக்
கீரை
                  Health medicinal Moringa oleifera Moringa tree
சாதாரணமாக வீட்டுக் 
கொல்லைகளில் தென்படும்
முருங்கை மரத்தை, மருத்துவ
பொக்கிஷம் என்றே சொல்ல
வேண்டும். ஏனெனில்
இது எண்ணற்ற
வியாதிகளுக்கு பல வகைகளில்
மருந்தாகிறது.
அதுபற்றி சற்று விரிவாக
காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய்.
உடலுக்கு நல்ல வலிமையைக்
கொடுக்க வல்லது. இதன் சுபாவம்
சூடு. ஆதலால்
சூட்டு உடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும்
தாதுவும் பெருகும்.
எனவேதான்,
இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது.
கோழையை அகற்றும்.
முருங்கைக்காய்
பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இதை நெய்
சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப்
பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்
களுக்கும் வாயு தங்கிய
இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின்
மிளகு ரசம்
வைத்து சாப்பாட்டுடன்
சேர்த்து உண்டு வந்தால் கை,
கால் உடம்பின் வலிகள் யாவும்
நீங்கும்.
மரம் முழுவதும் மருந்தாக
இருக்கும்
முருங்கையை அன்றாட உணவில்
சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.

Thank you : http://eluthu.com/
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான்

1 comment:


  1. பயனுள்ள தகவல் ..மேலும் படிக்க http://www.manam.online/Health/2016-AUG-23/Drumstick-Leaves-benefits

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval