Monday, October 2, 2017

ஒரு பயணம் தந்த தாக்கம் ...

Image may contain: 6 people, people smiling
கேரள முதல்வர் பிணராய் விஜயன் அழைப்பை ஏற்று கடந்த மூன்று நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி மலையாளிகள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து சென்றுள்ளார்.. 
கேரள மக்களின் சார்பில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்த ஷார்ஜா அதிபர், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு தேச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 149 மலையாளிகள் விடுவிக்க இங்கிருந்தே உத்தரவு பிறப்பித்தார்..
விடுதலை ஆகும் மலையாளிகள் மீண்டும் அங்கேயே வேறு வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கேரள முதல்வரின் கோரிக்கையை கனிவுடன் ஏற்றுக் கொண்டார்..
ஐக்கிய அரபு நாடுகளில் குடும்பத்தினருடன் வசிக்கும் கேரள மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் ஷார்ஜாவில் துவங்க உதவிகள்..
ஐக்கிய அரபு நாடுகளில் ஓட்டுனர் வேலை தேடி செல்லும் மலையாளிகள் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெற கேரளாவில் சிறப்பு மையம் துவங்க நடவடிக்கை..
அரபி மொழி பயிற்றுவிக்க வசதியாக கேரளாவில் சர்வதேச தரத்தில் அரபு மொழி ஆராய்ச்சி மையம் அமைக்க ஷார்ஜா அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல்..
Colachel Azheem

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval