Wednesday, February 10, 2021

சாதனைப் பெண்மணி ஸாரா அல் அமீரி.

நேற்றைய தினம் யுஏஇ அரசு துறைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அமீரக ஆட்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் முகநூல், வாட்ஸ்அப், டிவீட்டர், இன்ஸ்டாகிராம் பக்க முகப்பு படங்களில் தங்கள் தேசத்தின் வெற்றியை கொண்டாடினர்..
வானுயர காட்சி தரும் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் பூங்காக்கள் நீலவண்ண விளக்குகளால் ஜொலித்தது..

அரபுலகின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து தனது ஆய்வை துவங்கியுள்ளது.
அமீரகத்தின் அறிவியல்  மற்றும் விண்வெளி ஆய்வில் பன்மடங்கு வளர்ச்சிக்கு சான்றாக உலக நாடுகளால் பார்க்கப்படும் இந்த சாதனைக்கு மூளையாக செயல்பட்டவர் ஸாரா அல் அமீரி எனும் 34 வயது பெண்மணி..

Minister for Advanced Technology எனும் துறையின் யுஏஇ அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஸாரா அல் அமீரி "ஹோப்" எனும் பெயரிலான செயற்கை கோள் கடந்த ஜுலை 19ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது முதல் 33 பெண்கள் உட்பட அடங்கிய அமீரக விஞ்ஞானிகள் குழுவை வழிநடத்தி நேற்றைய தினம் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்..

கடந்த 2016ம் வருடம் Emirates Science Council தலைமைப் பொறுப்பை ஏற்ற ஸாரா , 2017ல் யுஏஇ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி அறிவியல் முன்னேற்றம் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அமீரக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி விண்வெளி ஆய்வுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்து முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டுள்ளார்.

அமீரகத்தின் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு துவங்கியுள்ளதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவுக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த ஐந்தாவது நாடு எனும் பெருமையை அமீரகம் பெறுவதற்கு ஸாரா அல் அமீரி தலைமையிலான குழுவினர் அயராது உழைத்துள்ளனர்...

பிபிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2020ம் ஆண்டில் உலகில் தாக்கம் ஏற்படுத்திய 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ஸாரா அல் அமீரி மட்டுமே அரபுலகை சேர்ந்தவர்.
Colachel Azheem

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval