Thursday, March 6, 2014

தமிழ்ப் பழமொழிகள் PART 5


•  கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
•  கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
•  கெடுவான் கேடு நினைப்பான்.
•  கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
•  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
•  கெட்டும் பட்டணம் சேர்.
•  கெண்டையைப் போட்டு வராலை இழு.
•  கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
•  கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
•  கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
•  கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
•  கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
•  கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கை

•  கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
•  கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
•  கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
•  கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
•  கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
•  கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
•  கையிலே காசு வாயிலே தோசை.
•  கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
•  கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
•  கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ

•  கொடிக்கு காய் கனமா?
•  கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
•  கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
•  கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
•  கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
•  கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
•  கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
•  கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
•  கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
•  கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
•  கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கோ

•  கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
•  கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
•  கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
•  கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
•  கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
•  கோபம் சண்டாளம்.
•  கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
•  கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
•  கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
•  கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
•  கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
•  கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ச, சா

•  சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
•  சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
•  சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
•  சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
•  சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
•  சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
•  சருகைக் கண்டு தணலஞ்சுமா?
•  சர்க்கரை என்றால் தித்திக்குமா?
•  சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
•  சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
•  சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
•  சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
•  சாண் ஏற முழம் சறுக்கிறது.
•  சாது மிரண்டால் காடு கொள்ளாது.
•  சித்திரமும் கைப்பழக்கம்.
•  சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
•  சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ

•  சுக துக்கம் சுழல் சக்கரம்.
•  சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
•  சுட்ட சட்டி அறியுமா சுவை?
•  சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
•  சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
•  சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
•  சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
•  சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
•  சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.
•  சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
•  சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
•  சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
•  சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
•  சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
•  சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை

•  செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
•  செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
•  செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
•  செய்வன திருந்தச் செய்.
•  செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
•  செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
•  செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
•  சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
•  சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
•  சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
•  சேற்றிலே செந்தாமரை போல.
•  சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ

•  சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
•  சொல் அம்போ வில் அம்போ?
•  சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
•  சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
•  சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
•  சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
•  சொல்வல்லவனை வெல்லல் அரிது.
•  சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
•  சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
•  சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
•  சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
•  சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
•  சோம்பித் திரியேல்.
•  சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை 
   

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval