இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
ஒரு மொபைலை வாங்கினால் அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் தான். பிறகு அடுத்த மாடலுக்குத் தாவி விடுகின்றனர். இதனால் இ-வேஸ்ட் எனப்படும் எளிதில் மட்காத மின்னணு குப்பை மலைபோலக் குவிந்து சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கின்றன. கூகுள் இதைத் தடுப்பதற்காக, 'புராஜக்ட் ஆரா' என்ற மொபைல் முறையை 2015 மார்ச்சில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் உள்ள சிறப்பம்சம், மொபைல் உதிரி பாகங்களை வாங்கி நீங்களே பொருத்திக்கொள்ளலாம். இதை 'மாடுலர்' அமைப்பு என்கின்றனர். அதாவது மொபைலின் எல்லா பாகங்களும் சதுரம், செவ்வகம் என்று சிறிதும் பெரிதுமான வில்லைகள் போல் இருக்கும். இவற்றை வாங்கி ஆராவின் முதுகெலும்பாக இருக்கும் எண்டோஸ்கெலட்டன் என்ற உலோகப் பட்டையில் மாட்டினால் உங்கள் மொபைல் ரெடி!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval