Sunday, February 15, 2015

காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா…?

vada-urad-dal-pongal-tamilnadu-breakfast-indian
“ராசா மாதிரி காலையில சாப்பிடு, ஒரு இளவரசன் போல மத்தியானம் சாப்பிடு, சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் போல ராத்திரி சாப்பிடு!” என்று ஒரு பழமொழி உள்ளது. ஏனெனில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலையில் சரியாக சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கலோரிகளை திறமையாக கரைக்கலாம். மேலும் காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும். அதிலும் உண்ணும் காலை உணவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். இப்படி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலானது அதிக அளவில் மெதுவாக உடலுக்கு கிடைக்கும்.
வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!!!
ஆகவே காலையில் உணவை உட்கொள்ளும் போது அத்துடன் பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காலையில் உண்ணும் உணவில் வைட்டமின் சி, டி , கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதை அதிகம் சேர்க்க வேண்டும். மூளைக்கு தொடர்ச்சியாக குளுக்கோஸ் தேவைப்படும். ஆனால் எப்போது ஒருவர் காலை உணவைத் தவிர்க்கிறாரோ அப்போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக பராமரிக்காமல் போகும். மேலும் ஆய்வு ஒன்றிலும் காலை உணவை உண்பதால் கவனச்சிதறல் குறையும், பிரச்சனைகளை சரிசெய்யும் திறன் அதிகரிக்கும், மூளை சிறப்பாக செயல்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் தவறாமல் காலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
உடல் எடையைக் குறைக்க பழங்கள் எப்படி உதவி புரிகிறது?
சில மக்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஆனால் அப்படி செய்வதால், மெட்டபாலிச அளவு குறைந்து, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல்,உடல் எடையைக் குறைப்பதே கஷ்டமாகிவிடும். அதுமட்டுமின்றி, இப்படி காலை உணவைத் தவிர்த்தால், பின் பசியின் அளவு அதிகரித்து, பின் மதிய வேளையில் நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு, இதனால் உடலில் கலோரிகள் அதிகரித்து, உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்க ஆரம்பமாகும்.
இட்லி, ரவா இட்லி,
தோசை மற்றும் சாம்பார் இவற்றில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது மிகவும் ஆரோக்கியமானது.
பிரட்/முட்டை அல்லது பிரட்/பால்
இவற்றில் ஏதேனும் ஒன்றை தவறாமல் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் கிடைக்கும்.
சப்பாத்தி மற்றும் பருப்பு
காலையில் சப்பாத்திக்கு தால் செய்து சாப்பிட்டால், அதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உடலின் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்கும்.
பொங்கல்/உப்புமா காலை உணவாக பொங்கல் அல்லது உப்புமாவை எடுத்து வருவதும் சிறப்பான வழி. இவற்றிலும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
ராகி/கேழ்வரகு கூழ் அக்காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் ராகி கூழ் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் திடமான உடலுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆகவே நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால் காலையில் ராகி கூழ் சாப்பிட்டு வாருங்கள்.


பாலுடன் ஓட்ஸ்/கார்ன் ப்ளேக்ஸ் காலையில் ஒரு பௌல் பாலுடன் ஓட்ஸ்/கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிட்டு வருவதும் மிகவும் நல்லது. நண்பர்களே! ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval