Thursday, February 12, 2015

செல்போனில் இலவசமாக இணைய தள வசதி பேஸ்புக் திட்டம்



3D-Facebook-Logoஇந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் இணைய தள வசதியை இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 500 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக, ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ என்ற ஒரு அதிரடி திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த திட்டம் ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்த தொடங்கிவிட்டது. 
இந்த சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெறமுடியும். முதல் கட்டமாக 33 இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தவிர ஏர்டெல் மற்றும் வோடோபோன் வாடிக்கையாளர்க ளுக்கும் இந்த சேவையை வழங்குவதற்காக அந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval