Friday, December 18, 2015

பேஸ்புக், டுவிட்டர், கூகுள் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: காரணம் என்ன?

logo_660_111512085416ஜெர்மனி  நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் அது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வருகை தரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.
 அண்மையில் வெளியான செய்தியில், ஜேர்மனிக்குள் இந்த ஆண்டு இறுதி வரை சுமார் 10 லட்சம் அகதிகள் வருவார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஜேர்மனியில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால், அவர்கள் மீதான இனவெறி தாக்குதலும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் வழியாக அகதிகளை கடுமையான சொற்களை பயன்படுத்தி சாடி வருகின்றனர்.
இதனால் ஜேர்மனி நாட்டின் மதிப்பு வெளிநாடுகளிடையே பாதித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து, பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஜேர்மன் சட்ட அமைச்சரான Heiko Maas உள்ளிட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில், ‘சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் இனவெறியை தூண்டும் விதமான தாக்குதல்கள், மத துஷ்பிரயோகம் உள்ளிட்ட மோசமான கருத்துக்களை நீக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை பரப்பாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
ஜேர்மன் அதிகாரிகளின் கோரிக்கை ஏற்ற பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் ‘அடுத்த 24 மணி நேரத்திற்குள் சமூக வலைத்தளங்களில் உள்ள மோசமான கருத்துக்கள் நீக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழாதவாறு கண்காணிக்கப்படும்’ என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval