Thursday, May 3, 2018

நாங்க ஒரு டீம் எங்களுக்கும் எதிக்ஸ் இருக்கு இப்படியும் நடக்குதா அதிர வைக்கும் போன் ஆடியோ

சென்னை சோலிங்கநல்லூர் கானத்தூர் அருகே பல் மருத்துவமனையில் பணியாற்றுபவர் சுரேஷ். இவருக்கு ரவுடி ஒருவர் போன் செய்து மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை யாரும் கேட்ருக்காத வகையில் அந்த மிரட்டல் ஆடியோ கேட்போரை அதிர வைக்கின்றது.
இந்த ஆடியோவை கேட்கும் போது ஹீரோ குழந்தைகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது போன்று சமீபத்தில் ஒரு சினிமா படம் வெளியானது. அது அப்படியே நினைவிற்கு வருகின்றது.
இந்த பாரு போலிஸ் கீலீசின்னு போகாத டைம் தான் வேஸ்ட் சினிமால வர்ர மாறி எங்கள அவங்ளால பிடிக்க முடியாது என அசால்ட்டாக பேசுகிறான் அந்த ரவுடி.
எங்கிட்ட பணம் இல்லை என அவர் கூறியதும் உன்னை 10 நாளா வாச் பன்னிகிட்டு தான் இருக்கோம் பொய் சொல்லாத என மிரட்டுகின்றான் அந்த ரவுடி.
இந்த ரவுடி நன்கு படித்தனாக இருப்பான் போல் தெரிகின்றது. ஆங்கிலத்தில் தத்துவங்கள் பேசி மிரள வைக்கின்றான்.
எங்களுக்குன்னு ஒரு எதிக்ஸ்லாம் இருக்கு நாங்க ஒரு டீம் நம்பிக்கை துரோம் எங்களுக்கு பிடிக்காது என சினிமா வசனம் பேசுவது போன்றே பேசுகின்றான் அந்த ரவுடி
நீ பணம் தரல உன்னைய போட்டு தள்ளிட்டு உன் பேர சொல்லி மத்தவங்கள மிரட்டி காசு வாங்கிருவோம் என்கின்றான் அந்த ரவுடி.
அவன் ஒரு லட்சம் கேட்க நான் பத்தாயிரம் தருகிறேன் என்றதும். பத்தாயிரத்துக்கெல்லாம் உன்ன போடாம இருக்க முடியாது. வீனா காச பாத்து உன் குடும்பத்த இழந்துராதா என அச்சு அசலாக சினிமா டயலாக் பேசுகிறான் அந்த ரவுடி.
எங்கள யாராலும் பிடிக்க முடியாது எந்த எந்த குளுவும் தடயத்தையும் விட்டு வைக்காம சம்பவம் செய்வோம் இது நாங்க ரொம்ப ப்ரஃபஷனல் என அறிவாளித்தனமாக பேசுகிறான் அந்த ரவுடி
ஒரு நிமிடம் நமக்கே ஒரு வேல இவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து வந்து பேசுறானா என நினைக்க தோன்றுகிறது ஆனால் அவன் பேசும் விதமும் கொடுக்கும் தகவல்களும் அதிர வைக்கின்றது.
போலிசார் இவன் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இவன் பேசுவதை வைத்து பார்க்கும் போது பல நாட்களாக இந்த தொழில் நடந்து வருவதை அறிய முடிகின்றது.
இவனிடம் எத்தனை பேர் சிக்கி பணத்தை இழந்தார்கள் என்பது இவன் பிடிப்பட்ட பிறகு தெரியவரும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval