Sunday, July 28, 2019

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்

 அல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்
ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.
அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
உம்ராவுக்கு ஃபறுளுகள் ஐந்துண்டு;
இஹ்றாம் நிய்யத்து வைத்தலும்,கஃபாவை தவாபு செய்தலும்,(கஃபாவை இடது புறம் சுற்ற வேண்டும்) ஸபாமறுவா வென்னும் மலைகளுக்கிடையில்ஏழுதரம் போய்வருதலும்,உச்சியில் மூன்று ரோமங்களைதலும்(அல்லதுமுழுவதுமாகவும்மழிக்கலாம்),இச்செய்கைகளை முன்பின் பிறழாமல ஒழுங்காகச் செய்தலுமாகும்.
ஹஜ்ஜுக்கு ஆறு ஃபறுளுகளுண்டு 
மேற்சொன்ன ஐந்து ஃபறுளுகளோடு ஆறாவதாக அறபாத்தில் தரிபடுதலாகும் அறபாவில் தரிபடுங்காலம்
பிறை ஒன்பது லுகறு முதல் பத்தாம்நாள் ஃபஜ்றுக்குள்ளாகும்.
ஹஜ்ஜில் ஐந்து வாஜிபுகலுண்டு
இஹ்றாம் கட்டுதலும், பெருநாளிரவின் பிற்பாதியில்முஸ்தலிபாவில் தரிபடுதலும்,அய்யாமுத்தஷூரீக்கின்
மூன்றிரவுகளிலும் மினாவில் போய்த்தரிபடுதலும்,கல்லெரிதலும்,பிரயாணத்தின்போது கஃபாவை வலம்
வருதலுமாகும்
இஹ்றாம் கட்டுதலிள் ஐந்து சுன்னத்துகலுண்டு
குளித்தலும்,நறுமணம் பூசுதலும்,வெள்ளைதுணியொன்றுடுத்தி ஒன்றை போர்த்திக்கொள்ளுதலும்,நிய்யத்தை
வாயினால் சொல்லுதலும்,தல்பியத் ஓதுதலுமாகும்(தல்பியத்தெண்பது'ல்ப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
என்னும் துஆ
ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகளை சரியாகச்செய்து மார்க்கத்தை சரியாக புரிந்து நடந்து கொள்ள
அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக/
ஆமீன் யாரப்பல் ஆலமீன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval