Thursday, August 29, 2019

கண்ணீரோடு எழுதுகிறேன்

Inline imageஉறவுகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. இத்தனை நாளைவிட நேற்று நடந்த சம்பவம் மனதளவில் பாதிப்பும் அழுகையும் தான் இருந்தது 

நேற்று (27-08-2019) இரவு ஒரு சகோதரி என்னை அழைத்து கொட்டிவாக்கத்தில் ஒரு அம்மா ரொம்ப முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கணும் என்றார்கள் நானும் விசாரித்தேன் உறவினர்கள் யாரும் இல்லையா என்றெல்லாம் கணவர் மட்டும் இருக்கிறார் அவரும் வயதானவர் என்றார்கள் . எப்போதும் போல உடனடியாக புகைப்படம் அனுப்புங்கள் என்னவென்று பார்க்கிறேன் என்றேன்

அடுத்தசில நிமிடங்களில் புகைப்படம் வந்தது பார்த்தவுடன் மனது உடைந்து என்னை அறியாமல் கண்ணில் இருந்து அழுகை வரத்தொடங்கியது. உடனடியாக மத்திய சென்னை தமுமுக  ஆம்புலன்ஸ் எடுத்துக்கொண்டு நானும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காதர் அவர்களும் 20 நிமிடத்தில் சென்றோம். 

சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து 100 மீட்டர் அளவில் கூட செல்லமுடியாத அளவு துர்நாற்றம் . பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டேன் ஏன் உங்களுக்கு எதுவும் தெரியாத இந்த அளவு வரும் வரை அமைதியாக இருந்திர்கள் என்று அவர்கள் சொன்னது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது . இந்த கணவன் மனைவி வீடு வாங்கி 11 வருடங்களுக்கு முன் இங்கு வந்தார்கள். இதுவரைக்கும் ஒரு நாள் கூட எங்களிடம் பேசியதும் இல்லை. வீட்டை தொறந்து வைத்ததும் இல்லை நாங்கள் பேச சென்றாலும் பேச மாட்டார்கள் என்றார்கள். 

இன்று காலை தான் எங்களிடம் என் மனைவிக்கு ரொம்ப முடியல என்று சொன்னார் நாங்களும் 108 ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டு வரவைத்து பார்த்தோம். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கணவர் அனுமதிக்கவில்லை என்றார்கள். காலையில் லேசாக உயிர் இருந்து இருக்கிறது என்றார்கள் . உடனடியாக நாங்கள் உள்ளே சென்று அவரிடம் நாங்கள் உங்கள் பிள்ளைகள் போல் தான் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சமாதானம் செய்து பார்த்தோம் . அந்த அம்மாவிற்கு எந்த ஒரு அசைவும் இல்லை. 

அவரிடம் கேட்டோம் எப்படி நீங்கள் பேசுவீர்கள் என்று கால்களை அமுக்குங்கள் வலியில் லேசாக சத்தம் போடுவார் என்றார். நாங்களும் முயற்சி செய்தோம் ஒரு சத்தம் இல்லை எதுமே இல்லை உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம்  அவர்களும் வந்தார்கள். 

அப்போது அந்த முதியவரிடம் விசாரித்தோம் என்ன ஆயிற்று என்று .. நான் IIT Retd Professor என்றும்.. எங்கள் மகள் 8 வருடங்கள் முன் மரணம் அடைந்து விட்டார் . ஒரு வருடங்களாக படுத்தப்படுகையாக என் மனைவி இருந்தார். எனக்கும் வயது ஆகிவிட்டது ஒரு வருடமாக நான் சேரில் தான் உக்காந்தே உறங்குவேன் . ஆறு மாதமாக ஒரே பக்கம் படுத்து கொண்டுதான் இருக்கிறார் என்றார்.  நாங்கள் உடனடியாக சுத்தம்செய்ய முயன்றபோது உடல்முழுக்க அவரை சுற்றி கரப்பான் இருந்தது . அது அந்த அம்மாவை கடித்து ஒரு பக்கம் முழுவதும் அழுகிப்போய் முழுவதும் சிதைந்து சதைகள் எல்லாமே கொட்டிக்கிடந்தது. மனதை கல்லாகி சுத்தம் செய்து வைத்தோம். 

இறுதியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது இறந்து விட்டார்கள் என்று உறுதி செய்தார்கள். 

எவ்வளவு மோசமான உடலகளை பார்த்து இருக்கிறேன் அழுத்தது இல்லை ... ஆனால் எப்படியாவது காப்பாத்தணும் என்ற நம்பிக்கையோடு வந்த இடத்தில ஏமாற்றம் மிஞ்சியதே என்ற ஏக்கம் சொல்லமுடியாத கண்ணீரை சிந்தினோம் 💔😭

உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அமரர் அறையில் 3.30 மணியளவில் வைத்துவிட்டு .

இன்று காலை பிள்ளைகள் இல்லாத இந்த தாய்க்கு பிள்ளையாய் இருந்து நல்லடக்கம் செய்ய உள்ளோம் 😞

உறவுகள் என்றும் என்றென்றும் தொடரும் ..

தொடர்புக்கு :  8056205080

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval