Friday, June 20, 2014

என் இந்தியா எங்கே - ஒரு சிறப்பு பார்வை

Map and flag of India Stock Image

இது ஒரு இந்தியனின் படைப்பு..

இந்தியா ஆகஸ்ட் 15 1947 சுதந்திரம் வாங்கியது,,அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமை, இன்று நாம் இந்தியனுக்கு அடிமை,.இன்றும் நாம் சுதந்திரம் வாங்க வில்லை என்பது என்னுடைய கருத்து,,அதிர்ச்சியாக இருக்கலாம் ,,ஆனால் இதுதான் உண்மை, இதைப்பற்றி இப்பொழுது முழுமையாக பார்க்கலாம்,.

நம் இந்தியா ஏன் முன்னேறவில்லை? முன்னேற முடியாமல் ஏன் தடுமாறுகிறது?? விடை நிச்சயம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்து இருக்கும்,உண்மைத்தான் சகோதரர்களே..

அமெரிகாக்கவின் டாலருக்கு நிகரான இந்தியாவின் மதிப்பு 64 ரூபாய், ஏன் இந்த பணவீக்கம் ?? சகோதர்களே நான் ஒரு சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விழைகின்றேன்,,

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள ஒவ்வொரு இந்தியனும் ஏமாந்து கொண்டிருக்கிறான், made in india என்று பொறிக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் நாம் வாங்க நாம் தயங்குகிறோம் ,,ஆனால் வெளிநாடுகளில் made in india என்றால் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறார்கள்,,

காரணம் நமக்கு இரண்டாம் ரகம் பொருட்களை நமக்கு தந்துவிட்டு மேலை நாடுகளுக்கு முதல் ரக பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, வெளிநாடுகளில் வாழும் மாற்று மொழியனருக்கும் நம் இந்தியாவை சொல்லமுடியாத அளவுக்கு புகழ்கிறார்கள் ,,ஆனால் உள்நாட்டில் இருக்கும் நமக்கு ஏமாற்றமே மிச்சம்,

நம் நாட்டில் ஒருவனுக்கு வேலை கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை,,எந்த துறையாக இருக்கட்டும், வேலை கிடைத்தாலும் அவன் சம்பளம் 6000 ரூபாய் 7000 ரூபாய்,,ஆனால் வெளிநாட்டில் வேலை குப்பை அள்ள செல்பவருக்கும் கிடைக்கும் சம்பளம் குறைந்த பட்சம் 30000 ரூபாய், காரணம் இங்கு அதிகநேரப்பணி உண்டு ,,ஆனால் இந்தியாவில் எங்கும் கொடுப்பது இல்லை, நம் இரத்தத்தை உறிஞ்சுவிட்டு நமக்கு தருவது
ஏமாற்றம்,,

இந்த வெளிநாடுகளில் இந்தியன் என்று சொன்னால் சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே,,எழுந்து நின்று கை கொடுப்பான்,,ஏன் என்றால் நம் நாட்டின் மீது நம்மவர்களைவிட அவர்கள் அதிகம் மதிப்பு வைத்து உள்ளார்கள்,ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு,,ஆனால் நம் நாட்டின் உள்ளேயே நாம் ஏமாந்து கொண்டிருகின்றோம்,

ஒரு உதாரணம் நண்பர்களே- நாம் அனைவரும் சீனா மொபைல் ஒன்று வாங்குகிறோம்,,விலை மலிவென்று,,அதே மொபைல்தான் வெளிநாட்டவரும் வாங்குகின்றார்கள்,,வெட்கமான விஷயம்,,நாம் வாங்குவது 3 வது ரக தொலைபேசிகள், இதற்க்கு நாம் யார் மேல் கோபப்பட முடியும்,நிச்சயம் நம் அரசாங்கம் தான் இதற்கு உத்துழைப்பும் அதிகாரமும் தருகிறது,

மற்ற நாட்டினார் நம் நாட்டில் வந்து விருந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர், ஆனால் நம் கோடி கடைசியில் இருக்கும் என் ஏழை விவசாயிக்கு ஒரு வேலை கஞ்சி கிடைப்பதில்லை,,இதிலும் ஏமாற்றம்தான்,,

நீ ஊழல் செய்கிறாய்,,சொன்னால் நிறுத்த போவதில்லை,,ஆனால் 90 % நீ சாப்பிட்டால் 10 % எங்களுக்கு சாப்பாடாவது குடு,,ஏமாறும் நாம் இருக்கும் வரை நாம் ஏமாந்து கொண்டே இருப்போம், கொஞ்சம் யோசியுங்கள்,,உங்கள் பணமே உங்களுக்கு இலவசமாய் கொடுத்துவிட்டு பின்னால் பால் கட்டணனும் பேருந்து கட்டணனும் ஏற்றி என்ன பயன் ??

என் வீட்டில் மின்சாரம் இல்லை,,ஆனால் நீ அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 5000 மெகா வாட்ட்ஸ் மின்சாரம் தருகிறாய் ,,ஏன் என்றால் அவன் இல்லது உங்களுக்கு வருவாய் கிடைக்காதது அல்லவா?

உலக வங்கி கடன் ஊர் ஏமாற்றும் வேலை,,நீ தரமான பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு மட்டமான பொருட்களை எங்களுக்கு ஏன் தருகிறாய்,முதலில் உன் நாட்டை கவனித்து விட்டு பின் அண்டை நாடை கவனி,வருமானம் ஈற்றிகொள்..

வெளிநாடுகளில் ஒரு முட்டையில் ஓட்டின் மேல் முட்டைக்கான கால தேதி எப்பொழுது முடிவடையும் என்று பொரிக்க பட்டுள்ளது ,,ஆனால் நம் அரசு தரும் மருந்துகளில் கலப்படம் உயிரிழப்பு நடக்கிறது.ஏழை மக்கள் எங்கு செல்வர்..

அடுத்து கல்வி.. வீதிக்கு நான்கு பொறியியல் கல்லூரிகள்,அதை கட்ட அரசுக்கு லட்ச கணக்கில் பணம் கட்டியாக வேண்டும்,அடுத்து ஏழை எளிய மக்களளின் வயற்றில் அடித்து முடிந்த வரை சேர்கை கட்டணம் வசூலிக்க வேண்டும் ,,ஏழை மக்கள் வங்கியின் உதவியை நாடி செல்ல வேண்டும்,,அங்கு கல்விகடன் கொடுப்பார், அதற்கும் வட்டி ,,ஏன் என்றால் அதும் அரசாங்கம் தானே நடத்துகிறது,,இது ஒரு சுழற்சி முறை
திருட்டு என்பது மக்களுக்கு தெரியவில்லை.

இவ்வளோ கடினப்பட்டும் தரமான கல்வி கிடைகின்றதா ? என்றால் நிச்சயமாக இல்லை..படிப்பு முடிந்ததும் வேலை,,வேலை நேர்முக தேர்வில் திறமை இருந்தும் ஒதுக்க படுகின்றனர்..ஏன் உள்ள செல்லவும் பணம் கட்டியாக வேண்டும்..இப்படி பண முதலைகள் எங்கும் இருப்பதால்தான் வெளிநாட்டை நம்பி படை எடுக்கின்றோம்..உன் நாட்டில் படித்து உன் நாட்டில் ஒரு வேலை தர முடியவில்லை நீ எவளோ பெரிய
பிச்சைக்காரன்,,

அடுத்து விளம்பரம் ,,ஒரு நடிகையை வைத்து இந்த சோப்பை பயன்ப்படுத்துங்கள் என்பார்,,அதே நடிகை வேறு ஒரு விளம்பரத்தில் பங்கு பெற்று இந்த சோப்பையும் பயன்ப்படுத்துங்கள் என்பார்,,நடிகை சொன்னால் வேதவாக்கு அல்லவா ?? அவர்களுக்கு அது வருமானம்,,10 ரூபாய் சோப்பு விளம்பரத்துக்கு அவர்களுக்கு 10 கோடி ,,உனக்கு தெருகோடி..யோசித்து பாருங்கள்,,யாரோ உழைப்பதற்கு ஏன் நம் உழைப்பின் பணம்
கட்ட வேண்டும் ,,

ஒரு குளிர்பானத்தின் உண்மை விலை என்ன தெரியுமா ? வெறும் 50 பைசா ..உங்கள் கையில் அது சேரும் போது 15 ரூபாய்,.14.50 பைசா எங்கே போகிறது,,இந்தியாவின் சட்டம் இதுதான், உள்நாட்டில் கொள்ளை அடி,,வெளிந்நாட்டில் கைகட்டி நில்,

பணத்தேவை அனைவருக்கும் உண்டு,,ஆனால் அந்த பணம் நேர்மையானதா என்றல் நிச்சயம் இல்லை?? நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசிக்கும் கணக்கு உண்டு தோழர்களே,,

சுவிஸ் வங்கியில் அனைவரின் பணமும் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்,,நீ தடுத்து நிறுத்த முடியுமா என்றல் இல்லை,,ஆனால் நீ உட்காந்து கொண்டே முற்றுபுள்ளி வைக்க முடியும்,

நேற்று ஒரு நாளிழதில் ஒரு செய்தி..40 கிலோ மீட்டர் பிரசவ மனைவியை சுமந்து வந்த மலை வாழ் கணவன்..தாமதமானதால் குழந்தை இறந்து பிறந்தது என்று,,கேலிகூத்து,,ஒரு அடிப்படை வசதி செய்து தரமுடியாமல் ஒரு குழந்தை இறந்துள்ளது..ஆனால் அந்த செய்தி சிறு மூலையில்,,அமைச்சர் வருகை ஒரு பக்க செய்தி,, எதர் எதற்கோ போராட்டம் நடத்தும் நாம் அந்த மழை வாழ் மக்களின் நிலைகாக ஒரு போராட்டம்
நடத்திருப்போமா??

சுவிசில் பலகோடி பதுக்கல் பணம், அதில் ஒரு பத்தாயிரம் அவனுக்கு கிடைத்திருந்தால் குழந்தை உயிர் பெற்றிருக்கும் ,,ஒவ்வொரு சாவுக்கும் என் தாய் நாடு தான் காரணம்,,இங்கு நடப்பது வேறு அல்லவா,

நாமும் முட்டாள்தானே,,புயல் தமிழகத்தில் தாக்க வருகிறது..பயம் பதட்டம்,,புயல் திசை திரும்புகிறது ,,ஆந்திராவை நோக்கி பயணம்,,நமக்கு நிம்மதி பெருமூச்சு,,பிழைத்தோம் என்று,,ஏன் ஆந்திராவில் உள்ளவர்கள் உன் உடன் பிறப்பு இல்லையா ?? உனக்கு வந்தால் உயிர் வலி,,அவனுக்கு வந்தால் நாம் பிழைத்தோம்,,என்ன ஒரு சுயநலம் நமக்கு??

இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு பட்டினி சாவுக்கும் நாம்தான் காரணம்,,யாரும் தவறு செய்யவில்லையா? என்று கேட்காதே? நீ செய்யாமல் இருக்க முயற்சி செய்,,

அடுத்து சினிமா,,சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம், அதற்கும் உழைகின்றார்கள்,இல்லை எனபது இல்லை,,அதை ரசி,,அதோடு நிறுத்திகொள்,ஆனால் அவர்களை உன் rolemodel ஆக பார்க்காதே,உன் உண்மையான rolemodel உன் தந்தையும் உன்னை காக்கும் ராணுவ வீரனும் தான்.,

இதுவரை பார்த்தது இந்தியாவின் வளர்ச்சி தடைப்பட என்ன காரணம் என்று ??

இனி பார்ப்பது இதை தடுக்க என்ன வழி ?போராட்டம் இல்லாமல் வெற்றி வாகை சூட முடியும்.அவர்கள் குடுத்த சட்டங்கள் அவர்களுகே கற்று கொடுப்போம்..

1.நம் உள்நாட்டு பொருள்களை நாம் உள்நாட்டில் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

2.விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்..

3.வீட்டில் உள்ள ஒரு ஆண் நிச்சயம் tractor ஓட்ட பழக வேண்டும்..

4.உனக்கு விவசாயத்தில் என்ன கிடைகின்றதோ உன் தேவைக்கு போக மீதிதான் விற்க வேண்டும்.

5. வளரும் பிள்ளைகளுக்கு விவசாயம் கற்றுகுடுக்க வேண்டும்.

6.அனைத்து பிள்ளைகளும் பொறியியல் படிப்பை செய்முறையாக படிக்க வேண்டும்.

7. ஒரு தெருவிற்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றால் வாழ தகுதி அற்றவர்கள் என்று உங்கள் அனைவரின் ரேஷன் கார்ட் திருப்பி தரவேண்டும்,,24 மணி நேரத்தில் RDO என்ற அரசு அதிகாரி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்.அவராலும் முடியாத பட்சத்தில் அந்த மாவட்டம் கவர்னர் பாதுக்காப்பில் வந்துவிடும்..இப்படி ஒரு சட்டமும் உண்டு..

8.அந்நிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து நமது இந்தியாவின் உயர் ரக பொருட்டுகளை வாங்கி பயன்படுத்தவேண்டும்.

9.முடிந்த வரை வங்கியில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

10.பொருளாதாரம் கல்வி இதில் சட்டம் மாற்றப்பட வேண்டும்.

11.ஒவ்வொரு பொருளிலும் கால முடியும் தேதி பொரிக்க படவேண்டும்,,அந்த பொருட்களை மட்டும் மக்கள் பயன்படுத்த வேண்டும்,

12. ஒரு ஒரு தெரு ஓரங்களிலும் குப்பை கொட்டும் சாதனங்கள் பயன் படுத்த வேண்டும்

13.மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டும்

14.இலவசங்களை வாங்க கூடாது

15.அடுத்த தேர்தலில் 49-O ஓட்டு போட வேண்டும்.

16.பிரச்சாரத்திற்கு வரும் அரசியல்வாதிகளை உள்ளே விடகூடாது,அது யாராக இருந்தாலும் சரி.

17.கிராமத்தில் இருக்கும் இளைநர்கள் ஒன்று திரண்டு உங்கள் கிராமத்தையும் வீட்டையும் காப்பாற்ற வேண்டும் .

18.தொலைபேசி காதலை தவிர்க்க வேண்டும் .

19.யாருக்கும் உங்கள் பங்கை விடகூடாது

20.நிலத்தை விற்க கூடாது

இந்த இருபதில் கொஞ்சம் கொஞ்சமாக கடைபிடிக்க வேண்டும்

உன் வீட்டை நீ காப்ற்றினால் போதும் ..ஒவ்வொருவரும் தன உழைப்பில் வீட்டை காப்பாற்றினால் போதும் ,,ஒரு கிராமம் மாறும்,ஒரு கிராமம் மாறினால் வட்டம் மாறும்,வட்டம் மாறினால் தாலுக்கா மாறும், மாவட்டம் மாறும்,,அதிக முயற்சியும் விடாமுயற்சியும் தேவை,,

அது நம் இந்தியா இளைநர்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம்


(குறிப்பு : உங்கள் கருத்துகள் வரவேற்கப்படும்.,இது நடைமுறை சாத்தியமா என்றால் இல்லைதான்,,ஆனால் உன் வீட்டை காப்பாற்றினால் போதும், இது வெறும் படித்துவிட்டு செல்லவேண்டிய விஷயம் அல்ல,,யாரேனும் ஒரு காதில் விழுந்தால் போதும் எனக்கு )

Thank You : ஜில்லுனு ஒரு ஷாகுல்

பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval