Saturday, June 14, 2014

நெடுஞ்சாலை உணவகம்






இந்த கொடுமைக்கும் முற்றுப்புள்ளி தேவை, சாமானியனின் மீது திணிக்கப்படும் ஒரு வகை அநீதி.





நான் அவ்வபோது பேருந்துகளில் தொடர்ந்து பயணம் செய்பவன், நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் தோன்றுகிறது. இங்கு விற்கப்படும் வாழைப்பழம் 10 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. 10 ரூபாய் மதிப்புள்ள ரொட்டி பாக்கெட் 20 ரூபாய்க்கும், சிகரெட் (கிங்ஸ்) 15 ரூபாய்க்கும். விற்கபடுகிறது. இவை எல்லாவற்றையும் விட உணவு தரமானதாக
இல்லை. இதை எல்லாம் யார்தான் கேட்பது?. இந்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு, பகலை விட இரவில்தான் அதிக பயணிகள் பயணம் செய்கிறார்கள், அந்த நேரத்தில் அம்மா குடிநீர் கிடைப்பதில்லை(அது மட்டும்தான் விலை குறைவு). அவர்கள் சொல்வதுதான் விலை, வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம், ஒரே ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் யாரும் கட்டாயப் படுத்தப்படுவதில்லை, இதை கவனிக்க வேண்டிய பொறுப்பு
யாரிடம் தான் உள்ளது.கவனிக்க வேண்டியவர்கள் இலவச உணவுக்கும், சிகரெட் போன்ற இதர பொருட்களுக்கும் ஆசைப் பட்டு, இதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர், M .R .P என்பது என்ன ?.
சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வசூலிக்கபடும் கழிவறை உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சுகாதாரமற்று காணப்படுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன ?
தீர்வை தேடி என் பயணம்.

Thank you : இராமச்சந்திரன் வை

பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval