Thursday, January 5, 2017

சவுதி அரேபியாவில் திருட்டு வழக்கில் இந்திய வாலிபருக்கு 300 கசையடி தண்டனை சுஷ்மா சுவராஜிடம் உதவி


ஐதராபாத்  மாலாகாபெட்டை சேர்ந்தவர் முகமது மன்சூர் ஹூசைன். இவர் எம்பிஏ பட்டதாரி ஆவார்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரியாத்தில் பணியாற்றி வருகிறார். ஹூசைன் அப்துல் ஹாதி அப்துல்லா அல் ஹூதானி அண்ட் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆட்டிட்டராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது ஹூசைன் மீது திருட்டு பழி சுமத்தி இவருக்கு ஒரு வருட ஜெயில் தண்டனையும், 300 கசையடிகளும் தண்டனையாக விதிக்கபட்டு உள்ளது.  

இது குறித்து ஹூசைனின் தாயார் ஹூர் உன்னிசா கூறியதாவது:-

ஹூசைன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25 ந்தேதி  106000  சவுதி ரியால் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றான் அப்போது அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த சில ஆசாமிகள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணதை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஹூசைன்  நிறுவன முதலாளிடம் தெரிவித்த போது அவர் யோசனையுடன்  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் அவன மீது திருட்டு குற்றம் சுமத்தி அவனை கைது செய்தனர் என கூறினார்.

இது குறித்து ஹூர் உன்னிசா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எழுதி உள்ள கடிதத்தில் இந்த விவகாரத்தில்  தலையீட்டு  உடனடியாக தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

இதற்கு முன் ஹூசைன் 15 லட்சம் ரியால் வரை வங்கியில் டெபாசிட் செய்து உள்ளான். அப்போது எல்லாம் திருடாமல் ஒரு சிறிய தொகை டெபாசிட் செய்யும் போது எப்படி திருடுவான் என அவரது தாயார் கேட்கிறார். சமபவத்தை விவரித்து கூறியபோதும் போலீசார் நம்பவில்லை.

இது குறித்து ஐதராபாத் பாராளுமன்ற உறுப்பினர்அசாதுடின் ஓவாய்சி இந்த விஷயத்தில் தலையிடுமாறு  சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் ஹுசைன் விவகாரத்தில் இயன்ற அளவு உதவுவதாக உறுதியளித்துள்ளது.
courtesy'Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval