Saturday, January 14, 2017

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சவூதி அரேபியா பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவு!

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சவூதி அரேபியா பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவு!
ஜித்தா(15 ஜன 2017): சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு மூன்று மாத பொது மன்னிப்பு வழங்கி சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.div>
சவூதியில் விசா காலம் காலாவதியாகி சட்டவிரோதமாக தங்கியிருக்கும்(OVER STAYERS) வெளிநாட்டினர், உம்ரா, ஹஜ் மற்றும் விசிட் உள்ளிட்ட விசாவில் சவூதி வந்து விசா காலம் முடிந்த பின்பும் திரும்ப தமது நாட்டுக்கு செல்லாமல் சவூதியில் தங்கி பணிபுரிபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு, மூன்று மாத பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜனவரி 15 2017) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி ஏப்ரல் 12 க்குள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அனைவரும் அவரவர்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும். என்று சவூதி குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் பிற கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட விதி மீறல்களால் அபராதம் விதிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.
இக்காமா காலம் முடிந்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த பொது மன்னிப்பு பொருந்தும். இவர்கள் உரிய ஆவணங்களுடன்(கைரேகை உள்ளிட்டவைகள்) தொழிலாளர் அலுவலகத்தில் (labour office)  சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் தரும் ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில்(ஜவஜாத்) சமர்பித்தால் அங்கு ஃபைனல் எக்ஸிட் பணிகள் முடியும். பின்பு தத்தமது நாடுகளுக்கு திரும்பலாம். இந்த பொது மன்னிப்பு காலம் முடிந்த பின்பு மிகக் கடுமையான சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval