Sunday, January 15, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வு


புதுடெல்லி: பெட்ரோல் விலை 42 காசுகளும், டீசல் விலை 1.03ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி பெட்ரோல் விலை 1.29ம் டீசல் விலை 97 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் பெட்ரோல் விலையை 42 காசுகளும், டீசல் விலையை 1.03 உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை 70.60ல் இருந்து 71.13 ஆக உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை 70.07ல் இருந்து 70.61 ஆகவும் உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 54 காசுகள் அதிகரித்துள்ளது. இதே போல் டெல்லியில் டீசல் 57.82ல் இருந்து 59.02ஆகவும், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 59.47ல் இருந்து 60.73 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் டீசல் விலை லிட்டர் 1.26 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval