Saturday, November 5, 2016

திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்


திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone"-இல் மன்னர் திப்புவின் கோட்டையை படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.

2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராக பார்க்கலாம்.

3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்ற தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.

4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ஆன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.

5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காக புலியின் படத்தை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாக சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.

6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்தும் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.    
திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர் பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும் போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள் மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளை சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது.  திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.
courtesy;Newa 7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval