Tuesday, December 6, 2016

ஒரு சீன பழமொழி ஒன்று உண்டு -

 ஒரு ராஜா வின் நாய் இறந்ததற்கு , அவரின் மந்திரிகள் கதறி கதறி அழுதனராம் ...ஆனால் அந்த ராஜா இறந்த போது ஒரு மந்திரி கூட ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லையாம்"
இறுதி ஊர்வலத்தையும் இறுதி மரியாதையையும் பார்த்தபோது எனக்கு இது தான் தோண்றியது !
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகி அவர் சிறை சென்ற போது , பார்த்த அந்த கதறல் குமுறல் , இன்று அவரின் இறுதி ஊர்வலத்திலோ குழிக்குள் இறங்கும் போதோ எங்கும் தென்படவில்லை ...
பூத உடல் கடைசியாக தென்படும் போது , சுற்றி ஒரு நாலு பேர்கூட கண்ணீர் விட்டு கதறவில்லை என்று நினைக்கும் போது சற்றே மனது வலிக்கிறது .... "இப்பவாது யாராவது அழுவுங்க டா ...இந்தம்மா இதுக்காகவாது ஒரு குடும்பம் புள்ள குட்டி னு வாழ்ந்திருக்கணும்" .... உலகமே வியக்கும் படி வாழ்ந்த அந்த இரும்பு தலைவிக்கும் சொல்லப்படாத வலிகளும் ஏராளம் இருந்திருக்கும் !!
சுற்றியிருப்பவர்களை விட தூரத்தில் அழும் மூதாட்டிகளில் ஒரே ஒருவரை அந்த கடைசி நொடிகளிலாவது அழைத்து வந்து அருகே விட்டிருந்தால் , அந்த இரும்பு மனிதியின் பூத உடல் இன்னும் நன்றாக உறங்க சென்றிருக்கும் !!
போய் வாருங்கள் அம்மா ... இந்த மூதாட்டி போல் எத்தனை எத்தனையோ பேரின் உண்மையான அஞ்சலி உங்களை வந்து சேரும் !!
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval