Saturday, December 17, 2016

அளவுக்கதிகமாக கைப்பேசியை பாவிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் என்ன தெரியுமா? -

அளவுக்கதிகமாக கைப்பேசியை பாவிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் என்ன தெரியுமா?
அளவுக்கதிகமாக கைப்பேசி மற்றும் கணணியை பாவிப்பது மனநோய் நிலைமையொன்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஹங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் பணிப்பாளர் மனநல மருத்துவரான ஜெயன் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைப்பேசி மற்றும் கணணியை அளவுக்கதிகமாக பாவிப்பது மன நோய் சம்பந்தப்பட்ட வகைப்படுத்தல்களில் உள்ளடங்களும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பேரூந்துகளில் , தொடரூந்துகளில் மற்றும் வேறு பொது இடங்களில் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவதை விடுத்து கைப்பேசியை பாவிப்பது உறவுகளின் பிரிவுக்கு காரணமாக அமைவதாகவும் மனநல மருத்துவரான ஜெயன் மென்டிஸ் குறிப்பிட்டிருந்தார்.
- See more at: http://www.asrilanka.com/2016/12/17/37489#sthash.fnekTF59.dpuf

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval