Wednesday, December 14, 2016

இனிவரும் ‘மாருதா’ ‘மோரா’ புயல்களால் பேராபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

கடந்த திங்கட்கிழமைதான் வர்தா புயல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புரட்டிப்போட்டு  இன்னும் மீளவில்லை. ஆனால், தொடர்ந்து வரும் புயல்களால் பேராபத்து உள்ளதாக 2014ம் ஆண்டு ‘எர்த் சயின்ஸ்’ என்னும் அறிவியல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளின் தாக்கத்தால் கடலில் வெப்ப நிலை அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக வங்கக்கடலில் வெப்ப மண்டலப் புயல்கள் அதிகளவில் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அதாவது 1891ம் ஆண்டு முதல் 2013 வரையிலான புயல்களை ஆய்வு செய்த அவர்கள் இனி வரும் புயல்களால் பெரிய ஆபத்து நேரிடலாம். தீவு நாடான இலங்கையே மூழ்கும் அளவுக்கு ஆபத்து வரலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வர்தா புயலால் சென்னையை துவம்சம் செய்து, 10 பேரை பலிவாங்கியது. சுமார் ரூ. 6,700 கோடி அளவுக்கு பொருட் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகள் கூறியுள்ளபடி பார்த்தால் அடுத்து வரப்போவது மாருதா மற்றும் மோரா புயல்கள் தான். இந்த புயல்களால் பெரும் ஆபத்துகள் விளையுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம், இயற்கையை சுரண்டி இந்த புவியை மலடாக்கிவிட்மோம். இனிமேல் இயற்கை தன் வித்தைகளை மனிதனை நோக்கி பாய்ச்ச ஆரம்பித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மனிதன் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டால் இந்த பூமியை வரும் தலைமுறைகளுக்கு காட்ட முடியாமல் கூட போகலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval