Wednesday, February 1, 2017

விடுதியில் மாணவனை தீ வைத்து எரித்த வார்டன் : கழிவறை சுத்தம் செய்ய மறுத்ததால்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இயங்கி வருகிறது ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதி.
இந்த விடுதியில் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை, காப்பாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதான வெம்பட்டி பிரவீண் என்ற சிறுவன் உடலில் 70 சதவீத தீக்காயங்களுடன் விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறான்.
அவன் அளித்த வாக்குமூலத்தில், விடுதி காப்பாளர் கதுரி வெங்கடேஸ்வரா ராவ் தான், தனது உடலில் தீ வைத்ததாகக் கூறியுள்ளான்.
கழிவறையை சுத்தம் செய்ய மறுத்ததால், பிரவீண் மீது ஆத்திரம் அடைந்த காப்பாளர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
தீயில் கருகிய சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறு கதறியும், தான் கூறுவதை செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் காப்பாற்றுவேன் என்று காப்பாளர் ஈவு இரக்கமின்றி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று மாலை 4 மணியளவில் நடந்ததாக, பிரவீணுடன் தங்கியிருக்கும் அவரது சகோதரன் அதுரி மணித் கூறியுள்ளான். மேலும், தன்னையும், தனது சகோதரனையும் உண்மையைச் சொல்லக் கூடாது என்று காப்பாளர் மிரட்டினார்.
ஆனால், நீதிபதி பிரவீணிடம் வாக்குமூலம் வாங்கும் போது அவன் உண்மையைச் சொல்லிவிட்டதாக அதுரி கூறினான்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval