Saturday, July 11, 2015

நான் காசாவிலிருந்து எழுதுகிறேன் - என்னுடைய இந்த செய்தியை உலகம் முழுவதும் பரப்புங்கள்.

உலக மக்களுக்கு காசாவிலிருந்து, நாங்கள் வெறும் எண்ணிக்கை அல்ல, நாங்கள் மனிதர்கள். இறைவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன் எங்களுக்கு பெயர் உள்ளது, எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர், எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வரலாறு உள்ளது, நாங்களும் உங்களைபோலவும் மற்ற மனிதர்கள் போன்றவர்களும் தான். நாங்கள் வெறும் செய்திகளும், இறப்புகளும் மட்டுமல்ல.
இஸ்ரேல் எங்கள் மீது அதி நவீன வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்துகிறது. கூட்டம் மிகுதியான கேம்புகள், பள்ளிக்கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிவாசல்கள், சேரி பகுதிகள் என்று விமானப் படையோ, ராணுவமோ, எதிர்த்து தாக்கும் ஆயுதங்களோ என்று எந்த விதமான எதிர்ப்பும் இல்லாத இடங்களை தாக்கிவிட்டு அவர்கள் இதை போர் என்று உலகிற்கு பிரகடனம் செய்கின்றனர். இது 'போர்' அல்ல 'கொலை'. நாங்கள் மறுமைக்காக சோதிக்க இவ்வுலகிக்கு அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டோம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுக்காக எங்களை உலக நாடுகள் கைவிட்ட நிலையில் அல்லாஹ் கைவிடமாட்டான் .எங்களைப்போன்று நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் நாடுகள் ஏன் வாய்மூடி மௌனம் காப்பது .அல்லாஹ் நாளை மறுமையில் உங்களிடம் கேட்டுத்ததான் ஆகுவான் என்பதை மறந்து விட்டீர்களா ? நீங்கள் மூன்றாம் நிலை போராட்டம் செய்யும் இடத்தில் இல்லை முதலில் நின்று உங்களது மறுமைக்காக போராடும் மார்க்கத்தை பின்பற்ற வில்லையா ? சகோதரிகளின் அழுகுரல் கேட்டல் இப்படிதான் இழுத்து மூட்டி ஊமையாகவும் செவிடர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் இருப்பீர்களா?

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval