Friday, July 3, 2015

விலை உயர்ந்த நியாமத்


With all this talk of holy whiskers, it’s worth noting that other ...ஓரு மனிதன் ஒரு மகானிடம் வந்து.. அல்லாஹ் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன்... இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான். 

மகான் : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு. 

அவன் :ம்ம் முடியாது 

மகான் : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு கால்யை வெட்டி எனக்கு தந்து விடு. 

அவன்: ம்ம்ம்மு முடியாது..... 

மகான்: நீ எவ்வளவு பணம் கேட்கின்றோயே அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு... 

அவன் : நிங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை குடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியாவே முடியாது... 

மகான் : அல்லாஹ் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியாமத்துகனை தந்துயிருக்கிறான்... ஆனால் அதற்கு ஷூகர் செய்யமால்... இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றயே..........? 

எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுத்திக் கொண்டு இருங்கள் 
அல்ஹம்துலில்லாஹ்......! 
அல்ஹம்துலில்லாஹ்........!
அல்ஹம்துலில்லாஹ்......!

அவன் தான் அல்லாஹ்... பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன்...கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33டன் (அதாவது.. 36,960k.g) கரியை உணவு வழங்குகிறான்....

சுப்ஹனல்லாஹ்....! 

உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான். 
ஆக, 
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று. 

உங்களைப் படைத்து, ரிஸக் அளித்து பரிபாலிக்கக்கூடிய ரப்பை அவனுடைய அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ உனது குடும்பத்துடன் ஒன்றாக இருக்கின்றாய்...எத்தனையோ பேர் உறவுகளை இளந்து தவிக்கின்றனர்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய்... எத்தனையோ பேர் தொழிலின்றி அலைகின்றனர்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ தேக ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்... எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய்... எத்தனையோ கப்ராலிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவற்கு உனக்கொரு இறைவன் இருக்கின்றான்... எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.
நீ நீயாக இருக்கின்றாய்... எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.

எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இரு..... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து....பிரறை மகிழ்வி...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval