Sunday, February 28, 2016

பற்களின் ஆரோக்கியத்துக்கு 10 கட்டளைகள்

images (1)பிரச்னை வந்தால் தான் மருத்துவரை அணுக வேண்டும் என்கிற மனப்போக்கில் பல் ஆரோக்கியமும் தப்புவதில்லை. முறையான பராமரிப்பின் மூலமே பலவித பல் நோய்களை வராமல் தடுக்கலாம் என்கிறார் பல் மருத்துவர் எம்.கணேஷ். அதற்கான பத்து பராமரிப்பு முறைகளையும் பட்டியலிடுகிறார்.
இயற்கையான காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உண்பது பற்களுக்கு நல்லது. வயிறு சுத்தமாக இல்லாதவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள், அடிக்கடி ஏப்பம் விடும் பிரச்னை உள்ளவர்களுக்கும் வாய் துர்நாற்றம் வரும்.சாப்பிடும் போது உணவுத் துணுக்குகள் ஈறுகளில் மாட்டிக்கொண்டிருந்து அப்படியே விட்டாலும் துர்நாற்றம் அடிக்கும். மூன்று நாட்களுக்குள் பற்கள், ஈறுகளுக்கு இடையே சிக்கிய உணவுத் துணுக்கை எடுக்காவிட்டால் நாள்போக்கில் கெட்டியாகி காரையாக பற்களில் படிந்துவிடும்.
சிலருக்கு தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும் பழக்கம் இருக்கும். பல் மருத்துவரிடம் காட்டி, அவர்கள் பரிந்துரைக்கிற பாலிவினைல் பிளாஸ்டிக்கால் ஆன நைட் கார்டை போட்டுக்கொண்டு தூங்கினால் தாடையில் வலி ஏற்படாது. தினமும் ஃபிளாஸிங் (Flossing) என்கிற முறையில் இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும்.
காபி, தேநீர், கிரீன் டீ போன்றவற்றை அதிகம் குடித்தாலும், சிகரெட் போன்ற புகையிலை பொருட்களும் பற்களில் கறையை ஏற்படுத்தும்.
மவுத் வாஷ் உபயோகிப்பது நீண்ட நேரம் பயனளிக்காது. மவுத் வாஷில் போதிய அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈறுகளை பாதிப்படைய செய்யும்.
மவுத் அல்சர் எனப்படும் வாய்ப்புண்கள் வந்து ஒரு வாரத்திற்குள் ஆறாவிட்டால் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது. பல் குத்தும் குச்சிகளுக்கு பதில் இன்டர் டென்டல் பிரஷ் பயன்படுத்தி பற்களுக்கு இடையே சுத்தம் செய்வது ஈறுகளுக்கு நல்லது.பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை அதிக பட்சம் 2 நிமிடங்கள் சரியான முறையில் தேய்த்தால் போதும். அதிக நேரம் பற்களை தேய்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை பிரஷ் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான காட்டன் துணியை நீரில் நனைத்து பற்களை துடைத்தாலே போதும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval