Thursday, February 4, 2016

தண்ணீரில் தத்தளித்த குடும்பத்தை காப்பாற்றிய சிறுமி


கொச்சி: தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த வேறொரு குடும்பத்தை காப்பாற்றி தன்னலமற்ற சேவை புரிந்துள்ளார் கேரள மாநில சிறுமி ஒருவர். 

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது கடுங்கலூர். இங்குள்ள ஆற்றில் துணி துவைத்து விட்டும், குளித்து விட்டும் வருவதற்காக, தாய், தந்தை மற்றும் இரு குழந்தைகள் சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாரா விதமாக அக் குடும்பத்தின் இளைய குழந்தை ஆற்றின் சுழலில் சிக்கி கொண்டது. அக் குழந்தையை காப்பாற்ற அதன் சகோதரி ஆற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த பதறிய குழந்தைகளின் தந்தை ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்த அவரும், சேற்றில் சிக்கியதால் நீந்த முடியாமல் தவித்துள்ளார். தன்னுடைய கணவரும் சிக்கிக் கொண்டதால் செய்வதறியாமல் தானும் ஆற்றில் குதித்துள்ளார் குழந்தைகளின் தாய். 

இதனை கண்ட அப்பகுதியில் படித்து கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு சிறுமி அனீஷா, ஆற்றில் குதித்து அக்குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். நீச்சல் பயிற்சியில் சிறந்து விளங்கும் அனீஷா, அக்குடும்ப நபர்களை ஒவ்வொருவராக நீரில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டுள்ளார். 

அனீஷாவுக்கு அப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களும் உதவி புரிந்துள்ளனர். 

அனீஷாவின் இந்த தைரியத்தைப் பாராட்டும் பொருட்டு, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் என அவரது வீட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

courtesy samayam

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval