Friday, February 19, 2016

சவூதியில் நபிவழி சட்டம் பிரகடனம்! புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் ஸவ்த் அதிரடி அறிவிப்பு!

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

புதிய மன்னர் சல்மான் பாரிஸ் அவர்களின் அதிரடி அறிவிப்பு....!!

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அவர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்....

யாரும் எனது ஆட்சியில் அநியாயத்தக்கு உட்படுத்தப்படுவதையும் அதனால் இறைவனுக்கு முன்னால் நான் குற்றவாளியாக மாறுவதையும் நான் விரும்பவில்லை.

நான் வாழும் இந்த காலத்தில் எனது ஆட்சியின் கீழ் உள்ள குடிமக்கள் பாதிக்கப்பட்டால் எந்த துணையும் இல்லாமல் அவர் என்னை அணுகலாம், என்னிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையிடலாம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்.

அப்படி முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எமது அரசி்ன் இணையதளத்தின் மூலமோ தமது புகாரை எமக்கு தெரியப்படுத்தலாம் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக எந்த கட்டணமும் இல்லாமல் தமது புகார்களை எனக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படி அனுப்பப்படும் புகார்கள் எனது பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் எனது குடும்பத்திற்கு எதிராக இருந்தாலும் எனது பேரபிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் அவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதி நியாயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கபடும் என்றும் அவர் அறிவித்திருப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது.

Thanks: arab news.
Thanks:- Abdul Raseed.

courtesy;v,kalathoor

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval