Wednesday, June 8, 2016

முஹம்மது அலி தனது மகள்களுக்கு செய்த அறிவுரை: :

ஒரு முறை, முஹம்மது அலி அவர்களை பார்க்க வீட்டிற்கு கண்ணியமற்ற ஆடைகளுடன் வந்திருந்தோம்.
காப்பாளர்களுடன் வீட்டிற்குள் வந்தோம். தந்தையோ வழக்கம்போல கதவிற்கு பின்னால் ஒளிந்திருந்தார், பயமுறுத்துவதற்காக காத்திருந்தார். பார்த்தும் முத்தமிட்டார் ஆர தழுவினார்.
பிறகு அவர் ,அவரது மடியில் உட்கார வைத்து என்னிடம் கூறிய விசயங்களை என்னால் மறக்கவே முடியாது. என்னிடம் கூறினார், ஹானா, கடவுள் படைத்ததில் எதுவெல்லாம் மிகுந்த மதிப்புமிக்க பொருட்களோ அதை பாதுகாத்து வைத்தார்; அதை அடைவதை கடினமாக்கி வைத்தார்;
வைரங்கள் எங்கே இருக்கும் ...பூமிக்கடியில் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
முத்துக்கள் எங்கே இருக்கும் ..
பெருங்கடலில் ஆழத்தில் அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
தங்கம் எங்கு இருக்கும் ..
சுரங்கத்தில் பல்வேறுபட்ட கற்கலோடு கலந்திருக்கும்; கடுமையான முயற்சியில் தான் தங்கம் கிடைக்கும்.
என்னை பார்த்து சொன்னார்கள், "உனது உடம்பு புனிதமானது; வைரம், முத்துகளை விட நீ விலையுயர்ந்தவள்;நீயும் (கண்ணியமான ஆடையினால்) பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval