Tuesday, June 21, 2016

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் !!!

இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ முறையினில் முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள், இருதயம்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் [ஆண்மைக் குறைவு] மற்றும் கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சித்த மருந்து செய்முறை :
1 - கருந்துளசி இலை பொடி - 300 கிராம்
2 - நித்யகல்யாணி இலை பொடி - 200 கிராம்
3 - சிறியாநங்கை இலை பொடி - 100 கிராம்
4 - நெல்லிக்காய் பொடி - 100 கிராம்
5 - மஞ்சள் தூள் - 50 கிராம்
இவைகளை ஒன்றாய் கலந்து கொண்டு தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர சிறுநீரிலும், இரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval