Sunday, June 12, 2016

மஸ்ஜித்களில் ஒலிபெருக்கி தடை விவகாரம்; காவல்துறை ஆணையருடன் சந்திப்பு!

சென்னையில் மஸ்ஜித்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது காவல்துறை.
இந்நிலையில் ஒலிபெருக்கி தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட சமுதாய அமைப்பின் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.
ஆலோசனையின் முடிவின் படி பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதியளிக்க கோரி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் M.L.A.,மஸ்ஜித்களின் கூட்டமைப்பு தலைவர் புரசை சிக்கந்தர், இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், மஸ்ஜித்கள் கூட்டமைப்பு செயலாளர் பசீர் ஆகியோர் தற்காலிகமாக ரமலான் முடியும் வரை ஒலிபெருக்கி தடையை நீக்க கோரி வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval