Wednesday, June 29, 2016

மிரளவைக்கும் சந்திரபாபு நாயுடு : கால்வாய்களிலும் மின்சார உற்பத்தி !

டந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கிருஷ்ணா நதியையும் கோதாவரி நதியையும் இணைத்துக் காட்டினார் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகப் பெரிய சாதனையை படைத்து காட்டினார். தற்போது தான் சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்து காட்டாக கால்வாய்கள் மூலம் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கியுள்ளார்.
ல் ஒன்றில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டன. வாய்க்கால்கள் மீது 6 அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு சோலார் பேனல்கள் வரிசையாக அடுக்கப்பட்டன.. 

இதற்காக சுமார் 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பரீச்சாத்திய முறையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில்  தற்போது மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.  இதன் மூலம்  தினமும் ஒரு மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. தொடர்ந்து அந்த  கிராமத்தில் 33/11 கிலோவாட் சக்தி கொண்ட சிறிய மின் நிலையம் அமைக்கப்பட்டது. 

தற்போது அதில்  இருந்து கிடைக்கும் மின்சாரம் சுற்றுவட்டாரத்தில்  உள்ள 10 கிராமங்களுக்கு தடையில்லாமல் வழங்கப்படுகிறது.  25 ஆயிரம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். பல நிறுவனங்களுக்கும் அந்த கிராமத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு  6.80 பைசாவுக்கு வசூல் செய்யப்படுகிறது . 

ஆந்திர மரபுசார எரிசக்தித் துறையுடன் இணைந்து' பெல்' நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஜுலை 2வது வாரத்தில் இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு முறைப்படி தொடங்கி வைக்கிறார். பின்னர் மத்திய அரசிடம் முறையாக ஒப்புதல் பெறப்பட்டு மாநிலம் முழுவதுமுள்ள வாய்க்கால்களில் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்படவுள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval