Thursday, March 15, 2018

அண்ணனின் விதவை மனைவியுடன்,15 வயது தம்பிக்கு கட்டாயத் திருமணம்!

பல முக்கியத் துறைகளில் இந்தியா மேம்பட்டு உயர்தரம் அடைந்துள்ளது என மார்தட்டிக் கொண்டிருக்கும் அதே தருணத்தின், இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் பல கிராமப் புறங்களில் இன்னும் பழக்கம் என்ற பெயரில் பின்பற்றி வரப்படும் சாங்கியங்கள் காரணமாக பல கொடுமைகள் நடந்தேறி வருகின்றன.
பீகார் கிராமம்!அப்படி பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடுமையின் காரணமாக தான் ஒரு பதின் வயது சிறுவனின் உயிர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பலியானது.
இறந்து போன சொந்த அண்ணின், விதவை மனைவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 15 வயதே நிரம்பிய சகோதரன் தற்கொலை செய்துக் கொண்டான்.

பீகார் கிராமம்!

இந்த சம்பவம் பீகாரில் உள்ள ராம்னா வினோபாநகர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுவன் கட்டாயத் திருமணத்திற்கு பிறகு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
10 வயது மூத்தவர்!

10 வயது மூத்தவர்!

அண்ணனின் விதவை மனைவி பதின் வயது சகோதரனை காட்டிலும் பத்து வயது மூத்தவர். சிறுவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த அவனது தந்தை சந்திரேஷ்வர் மற்றும் திருமண செய்த பெண் ரூபி தேவியின் பெற்றோர் ராம் பிரவேஷ் தாஸ், முதூர் தேவி மீது காவல் துறை அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதிந்து கைது செய்துள்ளனர்.
கட்டாயம்!

கட்டாயம்!

அக்கம்பக்கத்து வீட்டினர் அந்த சிறுவனை இருவீட்டாரும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக் கொள்ள வைத்தனர் என்று கூறுகிறார்கள்.
மேலும், அந்த சிறுவனின் அண்ணன் சதீஷ் மற்றும் ரூபி தேவிக்கு திருமணமாகி, ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். சதீஷ் ஒரு தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.
விழிப்புணர்வு!

விழிப்புணர்வு!

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மாநில அளவில் குழந்தை திருமணங்களை எதிர்த்தும், அதுகுறித்த விழிப்புணர்வும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரின் இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் தான் இப்படியான வினோத திருமண சடங்ககள் நடக்கின்றன என நினைத்திட வேண்டாம். பல மாநிலங்களில், பல பகுதிகளில் இப்படியான் சில விசித்திர திருமண முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஹிமாச்சல் பிரதேசம்!

ஹிமாச்சல் பிரதேசம்!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இவர்கள் மத்தியில் தொப்பி அணியும் பழக்கம் இருக்கிறது. யார் ஒருவர் அந்த பெண்ணுடன் இருக்கிறாரோ, அவர் தொப்பியை வீட்டின் வெளியே மாட்டி வைத்துவிட்டால், மற்றவர்கள் உள்ளே செல்ல மாட்டார்கள்.
உத்தர்காண்ட்!

உத்தர்காண்ட்!

ராஜோ எனும் இந்த பெண் டேராடூன்-ல் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் தான் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார் ராஜோ.
இவர்களது குடும்பத்தை பொறுத்தவரை இது இவர்களது குடும்பம் பழக்கம் எனவும்இதை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்காலத்திலும் கடைபிடிப்போம் என தெரிவிக்கின்றனர்.
தமிழகம்!

தமிழகம்!

நீலகிரியில் வாழ்ந்து வரும் ஒரு இன / குழு மக்கள் மத்தியில் இப்படியான சகோதரர்களை திருமணம் செய்துக் கொள்ளும் வினோத வழக்கம் இருக்கிறது என கூறப்படுகிறது.
ஆனால், இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. இது ஒரு செவி வழி செய்தியாகவே அறியப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval