Friday, March 23, 2018

சாலை விபத்தில் நண்பனை இழந்துவிட்டேன்..! மன வேதனையுடன் எழுதுகிறேன்...!

Image may contain: outdoor
இன்று தினம் தோறும் செய்தி தாள் எடுத்தால் பைக்கில் வேகமாக சென்ற இரு கல்லூரி மாணவர்கள் பலி , பேருந்தில், ரயிலில் படிக்கட்டு பயணம் மேற்கொண்ட பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் பலி இப்படி பட்ட செய்திதான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஆகிவிட்டது .இப்போ எல்லாம் டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்று தான் நினைக்குறேன் .
சிலர் வண்டியை தரையில் படுமாறு சாய்த்தும், ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்தும், ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி நிலை வரும் என நினைப்பதில்லை.
இன்றைய இளைஞர்கள் யாரோ நம்மள பார்க்கணும் சொல்லி அவர்கள் முன்னால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள் .ஆனால் நம்மை எப்போதும் பார்க்க துடிக்கும் பெற்றோர்களை பற்றி நினைப்பது இல்லை .
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று சொன்னால் ஹெல்மெட் போட்டால் முடி உதிர்கிறது என்றும் வண்டி ஓட்டமுடியவில்லை என்றும் இன்று பல பேர் சொல்கிறார்கள் .அவர்களுக்கு என்னுடைய பதில் உடம்பில் எங்கு அடிபட்டாலும் முடிந்த அளவு நம்மை காப்பாத்திவிடலாம் ஆனால் தலையில் லேசான காயம் ஏற்பட்டால் கூட அது உயிர் இழப்பில் வந்து விடும் என்பதை நாம் அறிவது இல்லை .
நாம் சாலை விபத்தில் இறந்த பிறகு பிரேத பரிசோதனை என்ற பெயரில் நம் உடல் அறுக்கப்பட்டு , தலை உடைக்கப்பட்டு உறுப்புக்கள் கொஞ்சம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு இறுதியாக நம் உடலை தைத்து கொடுப்பார்கள் . இப்படி உன் உடலை அப்பா அம்மா பார்த்தால் என்ன மனநிலையில் மாறுவார்கள் என்று யோசிக்க நாம் மறக்கிறோம் .
உன் தாயின் மார்பில் குடித்த பால் நீ சாலை விபத்தில் சிக்கிய பிறகு சாலையிலும் , மருத்துவமனையிலும் , அமார் அறையிலும் ஓடோடிக்கிடக்குமே அந்த இரத்தத்தை உன் தாயோ , தந்தையோ பார்த்தால் என்ன மனநிலைக்கு மாறுவார்கள் என்று சிந்திக்க நாம் மறக்கிறோம்.
நண்பர்கள் உடன் செல்லும் போது போட்டி போட்டுக்கிட்டு ரேஸ் ஒட்டுகிறோம் . நீ அடிபட்டால் உன்னுடன் வந்த நண்பர்கள் ஒரு நாள் மருத்துவமனையில் பேருக்கு இருப்பார்கள் .. ஆனால் நீ நல்ல நிலைமைக்கு வரும்வரை உன்னுடன் உன் பெற்றோர்கள் தான் கஷ்டப்படுவார்கள் என்று சிந்திக்க நாம் மறக்கிறோம்.
நீ அடிபட்டு கிடைக்கும் போது நம் உடலில் இருந்து வெளி வரும் மலம் ஜலத்தை உன்னுடன் ரேஸ் வந்த நண்பர்கள் அள்ளுவார்களா ? இல்லை நம்மை கழுவி விடுவார்களா ? இதல்லாம் செய்யக்கூடிய ஒரே ஜீவன் நம் அம்மா தான் என்று சிந்திக்க நாம் மறக்கிறோம்.
உனக்கு ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் நம் பெற்றோர்க்கு நாம் மட்டும் தான் பிள்ளை என்பதை நாம் உணர வேண்டும் . நண்பர்கள் என்றால் நம் உயிரை பாதுகாக்குறவனா இருக்கனும் நம் உயிரை எடுக்குறவனா இருக்கக்கூடாது ..
வாகனத்தை வேகமா ஓட்ட நினைக்கும் நீங்கள் ஒருமுறை பிரேத பரிசோதனை நடக்கும் இடத்துக்கு செல்லுங்கள் அங்கு வர கூடிய சாலை விபத்தில் பலியாக கூடிய உடல்களை பாருங்கள் அதை பார்த்து பெற்றோர்கள் அழுவதை பாருங்கள்.. இதுபோன்று நம் உடலும் ,நம் பெற்றோர்களும் அழுகணுமா ? என்று யோசிச்சிகொள்ளுங்கள் .
உன் நண்பன் வாகனத்தை வேகமாக இயக்கினால் நீங்கள் மெதுவாக ஓட்ட சொல்லுங்கள் நீங்கள் நண்பனுக்கு உண்மையாக இருந்தால் ஹெல்மெட் அணிய சொல்லுங்கள் இதனால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன் மாதாவரத்தில் நடந்த சாலை விபத்தில் எங்கள் நண்பனை இழந்து விட்டோம் அந்த பையனின் தாயின் அழுகை பார்க்கமுடியாமலும் ஆறுதல் சொல்லமுடியாமலும் தவித்தோம் ..இனி வரும்காலம் இதுபோன்று யாரையும் இழக்கக்கூடாது என்று இறைவனை பிராத்தித்து கொண்டவனாக என்னுடைய எழுத்தை முடித்து கொள்கிறேன்.
நன்றி 
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval