Saturday, March 3, 2018

சாலையில் பரிதவித்த ப்ளஸ் டூ மாணவிகள்! நெகிழவைத்த இன்ஸ்பெக்டர்

Image may contain: 2 people
ப்ளஸ் டூ தேர்வு மாணவ - மாணவியரின் வாழ்க்கையில் முக்கியமான தருணம். தெலுங்கானாவிலும் நேற்று முன்திம் தேர்வு தொடங்கியது. ஹைதராபாத்தில் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தேர்வு எழுத அரசுப் பேருந்தில் பயணித்தனர். திடீரென்று பஸ் பழுதாகி நின்றது. தேர்வுக்குக் குறித்த நேரத்தில் செல்லவில்லையென்றால் அனுமதி மறுக்கப்படும்.
பேருந்தில் இருந்து இறங்கிய பல மாணவிகள் ஆட்டோ பிடித்துத் தேர்வு அறைக்குச் சென்றனர். 8 மாணவிகள் மட்டும் வாகனங்கள் கிடைக்காமல் பரிதவித்தபடி சாலையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மாணவிகளைக் கண்டு விசாரித்தார்.
பின்னர், உடனடியாக அவர்களை ரோந்து வாகனத்திலேயே ஏற்றி பள்ளிக்கு வேகமாகக் கொண்டு சென்றார். ஆனால், அதற்குள் தேர்வு தொடங்கிவிட்டது. இதையடுத்து, தேர்வு அலுவலரைச் சந்தித்த இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, பஸ் பிரேக்டவுன் ஆன விஷயம் குறித்து எடுத்துக் கூறி மாணவிகளைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு வேண்டினார். தொடர்ந்து, மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத் டிராஃபிக் போலீஸ் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மேற்கொண்ட முயற்சிக்கும் செய்த உதவிக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற நற்செயல்களால் போலீஸ்துறை மீது மரியாதை வருவதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
வாழ்த்துக்கள் சாா்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval