Thursday, March 22, 2018

நாடு எங்கே போகிறது..?

Image may contain: one or more people, ocean, water and outdoor
உணவு கேட்க வந்த மூதாட்டியை கட்டிக் கடலில் வீசிய இளைஞர்கள்!
நாகர்கோவில் அருகே உணவு கேட்டு வந்த மூதாட்டியை, குழந்தை கடத்த வந்ததாக நினைத்துக் கை, கால்களை கட்டி இளைஞர்கள்
கடலில் வீசியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, குழந்தைகளை வடமாநில கும்பல் கடத்துவதாக வதந்தி பரவியுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மணக்குடியில், பசிக்காக வீடுவீடாக ஒரு மூதாட்டி உணவுக்கேட்டுச் சென்றுள்ளார். ஆனால், கிராம இளைஞர்கள் மூதாட்டியை குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் கை, கால்களை கட்டிக் கடலில் தூக்கி வீசியுள்ளனர்.
இந்த நிகழ்வுகளை சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் காண்போரை வருத்தமடைய செய்வதுடன், இளைஞர்கள் மீது ஆத்திரமடையச் செய்யும் வகையில் உள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval