Friday, March 10, 2017

எலும்புகளை உறுதிப்படுத்தும் தினை எள் சாதம்

தேவையான பொருட்கள்


கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைபருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து  கொள்ளவும்.

வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆற விடவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில், எள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு வேர்க்கடலை பருப்பைப் போட்டு தாளித்த பின், தினை சாத்தை இட்டு,எள்ளுப்பொடியைத் தூவி விட்டு  அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து கிளறி இறக்கவும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை எள் சாதம் தயார் !

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval