Wednesday, March 8, 2017

திடீர் என மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி, சாதனை படைத்த தமிழக மாணவன்

ஜனாதிபதி மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர் மனோஜ். காரணம் இவரின் கண்டுபிடிப்பு!
திடீர் என வரும் மாரடைப்பை முன் கூட்டியே கண்டு பிடிக்கும் கருவியை மாணவர் மனோஜ் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பலரின உயிர் காக்கப்படுவதோ பெரும் பொருளாதாரச் செலவு தவிர்க்கப்படும்.
”ஒரு நாள் எனது தாத்தாவிற்கு திடீர் என மாரடைப்பு வந்து நிலை தடுமாறி சுயநினைவை இழந்தார். அது தான் என்னை இந்த கருவியை கண்டுபிடிக்க தூண்டியது.
இந்த கருவி மூலம் எந்த அறிகுறியும் இன்றி  திடீர் என வரும் மாரடைப்பை முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியும்” என மாணவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
இந்த கருவி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தால் மாரடைப்பு சிகிச்சை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் மருத்துவமனைகளுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை!

உலக மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு கருவியை தமிழக மாணவர் மனோஜ் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவரின் கருவி பலரின் உயிரை காக்கவுள்ளது.
தமிழக மாணவர் மனோஜின் கண்டு பிடிப்பு அவரை ஜனாதிபதி மாளிகை விருந்திரனாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் உலகமே அவரை பாராட்டி வருகினறது.

மனோஜை ஜப்பான் அழைத்து கவுரவப்படுத்தியுள்ளது அங்குள்ள அறிவியல் யுனிவர்சிட்டி.
மனோஜ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
”இப்பதானே நல்லா பேசிகிட்டு இருந்தாரு திடீர்னு மாரடைப்பு வந்து இறந்து விட்டாரே என இனி யாரும் வேதனைப்படத்தேவையில்லை. மாரடைப்பு வருமா என்பதை முன் கூட்டிய கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் மாரடைப்பில் இருந்து விடுதலை பெறலாம்.
உலகமே பாராட்டும் மனோஜை நம் தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.
நன்றி சற்றுமுன் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval