Sunday, March 5, 2017

எஸ்பிஐ கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையா


புதுடெல்லி,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையாக, தவறுபவர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நடைமுறையை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய், நகர்ப்புறங்களில் 3 ஆயிரம் ரூபாய், புறநகரப் பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப் புறங்களில் 1000 ரூபாய் என குறைந்தபட்சமாக இருப்புத் தொகைக்கு வரம்பு நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்புத் தொகை குறைவாக இருப்பதற்கேற்றவாறு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அபராதம் பிடித்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அபராதம் விதிப்பானது நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தப்பட்ச இருப்புத் தொகைக்கும் வங்கி கணக்கில் உள்ள தொகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டு தொகைக்கு கணக்கிடப்படும். உதாரணமாக, பெருநகரங்களில், நிர்ணயிக்கப்பட்டதை விட 75 சதவிகிதம் இருப்புத் தொகை குறைவாக இருந்தால் 100 ரூபாயுடன் சேவை வரியும் பிடித்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இருப்புத் தொகையைவிட 50 முதல் 75 சதவிதம் வரையில் இருப்புத் தொகை குறைவாக இருந்தால் ரூ. 75 அபராதம் மற்றும் சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். . 50 சதவிதத்திற்கு குறைவாக இருந்தால் ரூ. 50 அபராதம் மற்றும் சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். இதுபோன்றுதான் கிராம புறங்களுக்கும், குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு 20 முதல் 50 ரூபாயுடன் சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிக்கையில் இருப்புத்தொகை குறைவதற்கு ஏற்பட, அபராதக் கட்டணம் வசூல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மேலும் சில மாற்றத்தை கொண்டு வருகிறது, அதாவது ஒரு மாதத்திற்கு, அதனுடைய வங்கி கிளையில் மூன்று முறைக்கு மேல்  பண பரிமாற்றம் செய்தால் ரூ. 50 வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் பண பரிமாற்றத்திற்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு எஸ்.பி.ஐ. அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கையில், “பண பரிமாற்றத்திற்காக கட்டணம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அடுத்த நிதியாண்டில் புதுபிக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு வருவதை தடுத்து நிறுத்துவது கிடையாது, கட்டணமானது மிகவும் பெயரளவானது. அடிக்கடி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது, நாங்கள் ஏடிஎம்மில் மாதம் 10 முறை இலவசமாக பணம் எடுக்க சேவையை வழங்கிஉள்ளோம்,” என கூறிஉள்ளார். 


--தினத்தந்தி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval