Tuesday, March 28, 2017

காலை உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் உங்களை குண்டாக்குகிறது என்று தெரியுமா?

ஃப்ளேவர்டு தயிர்ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது என்ற பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், உடல் பருமன் அதிகரிக்கும் என்பதும், காலை உணவைத் தயாரிக்கும் போது செய்யும் சில சிறு தவறுகள் நம்மை குண்டாக்கும் என்பதும் தெரியுமா?
நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், காலை உணவின் போது செய்யும் இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அதுவே உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக இருக்கும். சரி, இப்போது அந்த தவறுகள் என்னவென்று காண்போம்.

ஃப்ளேவர்டு தயிர்

சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு கிடைகளில் விற்கப்படும் ப்ளேவர்டு தயிர்களை காலை உணவின் போது உட்கொள்ளவே கூடாது. சாதாரண தயிரில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதேப் போல் ப்ளேவர்டு தயிர்களின் சுவை நன்றாக இருந்தாலும், அதில் சர்க்கரை அதிகம் உள்ளதால், இதனை காலையில் உட்கொண்டால், உடல் பருமனைத் தான் அதிகரிக்கும்.

அளவுக்கு அதிகமான பழச்சாறுகள்

தற்போது சோம்பேறித்தனம் பலருக்கும் அதிகரித்துவிட்ட நிலையில், கடைகளில் டப்பாக்களில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பழச்சாறுகளை வாங்கி காலை வேளையில் குடிக்கிறோம். ஆனால் இம்மாதிரியான பழச்சாறுகளில் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் இதர கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. எனவே காலையில் பழச்சாறுகளை குடிப்பதற்கு பதிலாக, பழங்களை வாங்கி சாலட் செய்து கூட சாப்பிடுங்கள்.

எண்ணெயில் நன்கு பொரித்த உணவுகள்

காலையில் வடை, பூரி போன்ற எண்ணெயில் நன்கு பொரிக்கப்பட்ட உணவுகளை எடையைக் குறைக்க நினைப்போர் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் கலோரிகள் ஏராளமான அளவில் உள்ளதால், காலை உணவிலேயே கலோரிகள் அதிகம் இருந்தால், நாள் முழுவதும் வயிறு உப்புசத்தை சந்திப்பதோடு, மிகுந்த சோம்பேறித்தனதுடனும் இருக்கக்கூடும். வேண்டுமெனில் பூரிக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுங்கள்.

எனர்ஜி பார்கள்

உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் என்று கடைகளில் விற்கப்படும் நட்ஸ்கள், விதைகள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் எனர்ஜி பார்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருப்பதால், காலையில் இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பேன் கேக்

மைதாவால் தயாரிக்கப்படும் பேன் கேக், அது எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, அவற்றில் அதிகளவு கலோரிகள் மற்றும் ஏராளமான சர்க்கரை உள்ளது. அத்தகைய பேன் கேக்கை காலையில் சாப்பிட்டால், உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

அளவான காலை உணவு

எடையைக் குறைக்க முயற்சிக்கிறேன் என்று காலையில் வயிறு நிறைய சாப்பிடாமல், மிகவும் குறைந்த அளவில் சாப்பிட்டால், பின் நாள் முழுவதும் எந்நேரமும் பசியை உணரக்கூடும். இது இப்படியே நீடித்தால், எடை குறைவதற்கு பதிலாக, அதிகரிக்கவே செய்யும்.

ப்ளேவர்டு ஓட்ஸ் அல்லது செரில்கள்

ஓட்ஸில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது. ஆனால் ப்ளேவர்டு ஓட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அதனால் நன்மைகள் கிடைப்பதற்கு பதிலாக தீமைகளையே பரிசாய் பெறக்கூடும். எனவே சாதாரண ஓட்ஸை தேர்ந்தெடுத்து காலையில் சாப்பிடுங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval