Wednesday, November 11, 2015

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீங்க

drinking_water copy
பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம்.
தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன. பைசெப்ஃபீனால் ஏ நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் எளிதாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.
பெரும்பாலும் பெண்களுக்கு இதன் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பைசெப்ஃபீனால் ஏ எனப்படும் இந்த இரசாயனத்தில் பல வகைகள் இருக்கின்றன இதில் டைப் 7 என சொல்லப்படும் இரசாயனத்தின் கலப்பினால், ஆண்களுக்கு விந்தணு வலுவிழப்பது மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வேலைக்கு செல்லும் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஏன் நாம் கடைகளில் வாங்கும் தண்ணீரும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் பாக்கெட்களிலும் தான் அடைத்து தரப்படுகிறது.
பெரும்பாலும் தினமும் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அல்லது பாட்டில்களில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாகும். இது நமது வீட்டில் பிடித்து வைக்கப்படும் பாட்டில்களில் மட்டுமல்ல, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களிலும் பாக்டீரியாக்கள் விரைவாக உருவாகிறது.
எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதை தவிர்த்திடுங்கள். உயர்த்தர பிளாஸ்டிக் எப்போதும் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின் இதர அலுவலக மற்றும் மற்ற உபயோகத்திற்கு அதற்கு அடுத்த இரண்டாம் தர பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் கடைசி நிலையான மட்டமா நிலைக்கொண்ட பிளாஸ்டிக்கை கொண்டு தான் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில், இதற்கு உத்தரவாதம் தர தேவையில்லை, மற்ற அனைத்திற்கும் உத்திரவாதம் தரவேண்டும். நம் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகளில் இனிமேல் உணவோ அல்லது நீரோ உட்கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval