Saturday, November 21, 2015

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் இருக்கைகளில் பெரிய டிவி திரை அறிமுகம்

index
பெரும்பாலான விமானங்களில்ல் பயணிகள் பொதுபோக்கும் விதமாக விமானங்களில் முன் இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் திரைப்படங்களைப்பார்க்க வசதியாக சிறிய அளவிலான‌ ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களில் Boeing 777-300ER and Airbus A380 விமானங்களில் பயணிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் படி ஓவ்வொரு சீட்டிலும் இணைக்கப்பட்டிருக்கும் டிவி திரை முதல் வகுப்பில் 32 இன்ச் வரை பெரிதாக்கப்பட்டுள்ளது.இதுவே சர்வதேச அளவில் விமானங்களில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிகபெரிய டிவி திரையாகும்.
இது போன்ற ஸ்கீ நாம் வீடுகளில் இருந்து டிவி பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மேலும் Economy Class பயணிகளுக்கு 13.3 இன்ச் வரை திரை அமைந்திருக்கும். 600க்கும் மேற்பட்ட‌ திரைப்படங்களும்,1230க்கு அதிகமான இசை சேனல்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval