Tuesday, November 3, 2015

சைனஸ்’ ன் ஆரம்பம் ஜலதோஷம் – அதனை வீட்டிலேயே குணப்படுத்த இலகுவான வழிமுறை!

Untitled-1
அடிக்கடி சளி பிடித்தல்
ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3
நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன் பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்’ கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்’ என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.
சளி பிடிக்காமலிருக்க எளிய வழிகள்:
🌀 குளிர்ந்த தண்ணீரில் தலை குளிக்கக் கூடாது. குளியல் முடிந்ததும் ராஸனாதி சூரணத்தை உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.
🌀 ராஸனாதி சூரணத்தைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது குறுமிளகு பொடி (black pepper). இரண்டு விரலால் சிறிதளவு (one pinch) எடுத்து தலைக்கு குளித்தவுடன் உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.
சைனஸ் பிரச்சனையை போக்க…
⭕ ஒரு வாணலியில் நல்லெண் ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டு ம். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
⭕ தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
⭕ தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.
⭕ குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண் டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
⭕ கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி , காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval