Sunday, November 1, 2015

தென்னிந்திய கிராமங்களில் வைஃபை வசதி: ஃபேஸ்புக், பிஎஸ்என்எல் இணைந்து வழங்குகிறது!


facebook_BSNLஃபேஸ்புக் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் இணைந்து தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவிலுள்ள கிராமங்களில் வைஃபை வசதி அமைக்க முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மேற்கு மற்றும் தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 100 இடங்களில் வைஃபை வசதி அமைக்க முடிவு செய்திருக்கின்றன. இந்த திட்டத்தின்படி பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடியை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கும். மேலும், இணைய சேவைக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தையும் தனியாக வழங்கும்.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் மற்றும் எம்.டி. அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில், ”இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே, 25 இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக ஃபேஸ்புக் நிதி மட்டுமே வழங்கும். வருவாயில் பங்கு எடுக்காது.
கிராமங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ரவி சங்கர் பிரசாத், நஜ்மா ஹெப்துல்லா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval