Sunday, November 1, 2015

வறுமை சூழலிலும் சாதித்த இளைஞர்


இவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நமக்கு தெரிந்ததெல்லாம் பணம் கொழிக்க விளையாடும் கிரிக்கெட் மட்டும்தானே...!!?
திருச்சி செங்காட்டுபட்டி குக்கிராமம், 
500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு.
ஒருவேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.
தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்
இச்சூழலிலும்கூட ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார்.
ஆம் கத்தாரில் நடைபெற்ற 'டெக்காத்லான்' தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார் ராஜேஷ்.
டெக்காத்லான் என்பது லேசுபட்ட காரியமில்லை ஓட்டம், ஹைஜம்ப், லாங்க்ஜம்ப், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பத்துவிதமான போட்டிகள் கொண்டதே டெக்காத்லான்.
இதில்தான் சாதித்திருக்கிறார் நம் தமிழன் ராஜேஷ்.
இவரின் கனவு "ஒலிம்பிக்கில் தங்கம்" வாங்கி நாட்டை கவுரபடுத்த வேண்டுமென்பதே.
நீ கண்டிப்பாய் வாங்குவாய் சகோதரா

courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval