Wednesday, April 18, 2018

ஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்

நிர்மலா தேவி விவகாரத்தில் அந்த பெரும் புள்ளிகள் யார் என்ற கேள்வியை அனைவரும் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் நிர்மலாதேவி மாணவிகளுடன் உரையாடிய வாட்சப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்று அதை இன்று வெளியிட்டுள்ளது. அடியோவில் இருப்பதை விட அதிர வைக்கின்றது அந்த வாட்சப் உரையாடல்!
நிர்மலாதேவியின் பேச்சிற்கு மாணவிகள் கொடுத்த செருப்படி பதில் என்ன என்பது ஆடியோவில் இடம் பெறவில்லை ஆனால் இந்த வாட்சப் உரையாடலில் மாணவிகளின் செருப்படி பதில்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த பாவத்தை எங்களை செய்ய சொல்ல எப்படி உங்களுக்கு மனம் வருகின்றது நீங்கள் இப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை என பதில் கொடுத்துள்ளனர் மாணவிகள்.
மாணவிகள் அசிங்கப்படுத்தியும் விடாமல் அவர்களை நிர்மலாதேவி வற்புறுத்துகின்றார். ஒரு கட்டத்தில் இது சாதாரண விசயமல்ல நீங்கள் ஒத்துக் கொண்டால் கலெக்டர் கூட ஆகலாம் எனக் கூறுகின்றார் நிர்மலாதேவி.
இந்த அறிய வாய்பை நழுவ விட்டு விடாதீர்கள் நானும் அப்படித் தான் ஆரம்பத்தில் நினைத்தேன் ஆனால் அவர்கள் என்னை பல முறை டெஸ்ட் செய்த பிறகு தான் தெரிந்தது இது ரொம்ப பாதுகாப்பானது என அவர்கள் என்னை மிகவும் பாதுகாப்பாக நடத்தினார்கள் என பச்சையாக பேசுகின்றார் நிர்மலாதேவி!
உங்களுக்கு ஓகே என்றால் ”குட் மார்னிங் என கேபிட்டல் லெட்டரில் எழுதி அனுப்புங்கள்“ அது உங்கள் சம்மதம் என நான் புரிந்து கொள்வேன் என கோட்வேடை சொல்லி கொடுக்கின்றார் நிர்மலாதேவி.
மேலும் மாணவிகளின் நல்ல புகைப்படத்தை முகப்பு புகைப்படமாக வைக்க சொல்கிறார் நிர்மலாதேவி.
இறுதியில் மாணவிகளிடம் மன்னிப்பு கேட்கின்றார் நிர்மலாதேவி. IAS ஆன பின்னர் கலெக்டராக ஒருவரை போடுவது என்பதை அமைச்சர்களை தாண்டி உள்ளவர்களின் கையில் உள்ளது.
முழுக்க முழுக்க ஒரு ப்ரோக்கர் பேசும் விதமாகவே அமைந்துள்ளது இவரின் இந்த பேச்சுக்கள்.
கலெக்டர் ஆகலாம் என நிர்மலாதேவி கூறுவதிலிருந்து அந்த பெரும் புள்ளிகள் கல்லூரி உயர் அதிகாரிகள் இல்லை என்பதை விளங்க முடிகின்றது. IAS அதிகாரியாக ஒருவரை தேர்வு செய்யும் அதிகாரம் மாநிலத்தின் கையில் கூட இல்லை மத்திய அளவில் உள்ள அதிகாரம்.
நிர்மலாதேவியின் இந்த வார்த்தை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.
கோட்வேடை பயன்படுத்த சொல்வதிலிருந்து இது போன்று ஏற்கனவே பலரிடம் இவர் இப்படி பேசியிருப்பார் என்பதையும் கணிக்க முடிகின்றது.
நேரடியாக எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் தப்பை தப்பில்லாமல் செய்யும் வழிமுறையோடு
பெரும்புள்ளிகளுக்கு மாணவிகளை இறையாக்கும் இந்த இழித் தொழில் நடந்து வருவதையும் இதில் புரிந்து கொள்ள முடிகின்றது.
யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ அவர்களே விசாரனை நடத்தினால் என்ன வெளிய வரப்போகின்றது எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுவார்கள் பொதுவான நபர்கள் மூலம் இது விசாரிக்கப்பட வேண்டும் விசாரனைக்குழுவில் பொதுமக்கள் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
மாணவிகள் பேசுவதும் வீடியோவின் இறுதியில் இடம் பெற்றுள்ளது

நன்றி நியுஸ் 18

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval