Thursday, April 26, 2018

வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும், தமிழர்.

Image may contain: 10 people, people standing and textதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியிலுள்ள சேதுராயன்குடிகாடு என்ற ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் (வயது:30), 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா வந்துள்ளார். நிறுவனம் சரியில்லாத காரணத்தால், அதிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாதம் முன்பு மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த இவரை அந்த வழியாக வந்த சகோதரர் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்

அந்த மருத்துவமனையில் போதிய வசதியில்லாததால், அங்கிருந்து கத்தீப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சையின்போது, அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவருக்கு முதலாளியின் தொடர்பு இல்லாததால், தாயகம் திரும்ப வழியின்றி மருத்துவமனையிலேயே இருந்து வந்திருக்கிறார். இந்த தகவல், தமிழ் சகோதரர் ஒருவர் வழியாக செந்தமிழர் பேரவையின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக தமாம் மண்டல செந்தமிழர் பேரவையின் உறவுகள், மருத்துவமனை சென்று பார்த்து அவருக்கு ஆரம்ப உதவிகளை செய்து வந்திருக்கின்றனர். அவரிடம் கடவுசீட்டு, தங்கும் உரிமம் ஆகியவை இல்லாத நிலையில், அவர் தாயகம் திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செந்தமிழர் பேரவையின் உறவுகள், சில சமூக சேவகர்களின் உதவியோடு துரிதமாக செய்திருக்கிறார்கள். சட்டதிட்டங்களுக்குட்பட்டு புறப்பாடிற்கு தேவையான ஆவணங்களை ஆயத்தமாக்கி, (24/04/2018) இரவு பிரபாகரனை விமானத்தில் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர், பத்திரமாக தாயகம் சென்றடைந்துள்ளார். 
இனத்தின் நலனில் நாம் கொண்டுள்ள அக்கறை எப்படிப்பட்டது என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக, தன்னலமின்றி களமாடி தாய்தமிழ் உறவை மீட்டெடுத்த போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
"இனநலம் காப்பது, நம் குணநலனில் கலந்தது" என்பதை நிரூபித்துவிட்டீர்கள் சொந்தங்களே...
வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும், தமிழர்.
நாம் தமிழர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval