Friday, April 27, 2018

நீதியரசர் ராஜிந்தர் சச்சார் மறைவு.

Image may contain: 4 people
உம்மத்தின் வேர்களை ஆழமாக வாசிக்க... ஆய்வு செய்ய.... அதன் வலிமைக்காக உழைக்க வைத்த நீதியரசர் இன்று நம்மிடம் இல்லை 
*************************************
குடியரசு இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதாரா நிலையை ஆய்வு செய்வதற்காக 2005 இல் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்.
650 ஆண்டுகள் இந்தியத் துணை கண்டத்தை ஆட்சி செய்த முஸ்லிம்கள்....கல்வியிலும் பொருளாதாரத்திலும் 100 விழுக்காடு முதன்மை இடத்தை வகித்திருந்த முதன்மை குடிமக்களின் இன்றைய பரிதாப நிலையை தக்க தரவுகளோடு வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.
2006க்குப்பிறகு முஸ்லிம்களின் மேம்பாடு தொடர்பாக நாட்டில் நடைபெற்ற எல்லா நிகழ்வுகளிலும் இவரின் பெயர் உச்சரிக்கப்படாமல் முடிந்தது இல்லை
உண்மையான அக்கறையோடும் இந்திய அமைப்பிற்குள் (SYSTEM ) செயல்படுத்தக்கூடிய பல பரிந்துரைகளோடும் 2006 இல் வெளிவந்த இவர் தலைமையிலான குழுவின் 403 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை இந்திய சமூக அரசியல் தலைவர்கள் பலரின் இதயத்தை துளைத்தெடுத்தது.
முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பில் வளர்ச்சியில் சிறிதளவு அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் பலரை தூங்க விடாமல் செய்தது.
நேரத்தையும் காலத்தையும் சந்ததியின் மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும்....ஊர் ஊராக சுற்றி உம்மத்தை உசுப்பிவிட வேண்டும்...இதனால் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக்கொள்ள வேண்டும்....என்ற வேட்கையை என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான சமூக ஊழியர்களுக்கு அதிகப்படுத்திய மிக ஆழமான ஆதார திரட்டுகள் அவை.
முஸ்லிம் உம்மத் தங்களது தேவைக்காக எவனிடமும் (மன்னிக்கவும் ) கையேந்தி நிற்க கூடாது என்பதற்காக முன்சென்ற அவர்களின் மூத்த தலைமுறை வாரி வழங்கியுள்ள வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்து பராமரித்தாலே போதும் முஸ்லிம்களின் அணைத்து மேம்பாட்டிற்கும் அது போதுமானது என்று நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளின் வக்ஃப் ஆக்கிரமிப்புகளை பகிரங்கப்படுத்தி இந்திய அமைப்பை வெட்கி தலை குனிய வைத்தவர்.
தமிழகத்தில் ஒரு சட்டக்கல்லூரி துவங்க உள்ளோம் நீதியரசர் என்ற முறையில் உங்களின் வழிகாட்டுதல் தேவை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசியில் பேசினேன்.
" 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடு முழுவதும் செய்து முடித்திருக்க வேண்டிய வேலையை இன்னமும் செய்யாமல் உங்கள் சமூகம் பேசிக்கொண்டே இருக்கிறது " என்று முகத்தில் அறைந்தாற்போல கூறினார்.
உம்மத்தின் வேர்களை ஆழமாக வாசிக்க... ஆய்வு செய்ய.... அதன் வலிமைக்காக உழைக்க வைத்த நீதியரசர் இன்று நம்மிடம் இல்லை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval