Monday, October 19, 2015

கனடா நாடாளுமன்றத் தேர்தல் தமிழர் ஒருவர் அமோக வெற்றி


Flag_of_Canada.svgகனடா நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பாக 5 தமிழர்கள் போட்டியிட்டனர், அதில்,ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதன் முதலாக கனடா நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்வான ராதிகா சிற்சபைஈசன் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறிவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விவாகரங்களிலும் அக்கறை கொண்டவர்.
ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கந்தரத்தினம் சாந்திக்குமார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், அங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.
மார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.
ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா வந்து இங்கு தனது படிப்பை மேற்கொண்டார்.
பிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள், நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval