Saturday, October 3, 2015

முஸ்லிம் சமூகத்தில் மண முறிவுகள் அதிகரித்து வருகின்றன

அதுவும் படித்த பட்டதாரிகள் ( ! ) மத்தியில் தான் 
கூடுதலாக இருக்கிறது என்றால் கல்வியாக
பாடமாக இளமை காலம் முழுவதும் நமது
பிள்ளைகளுக்கு எதை கற்பிக்கின்றோம்
என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
முதலாளித்துவ கல்வி வழங்கிய பரிசான
Ego என்ற அகங்காரம் தலை தூக்கி நிற்கிறது.
ஆண் / பெண் இருவருக்கும் இறைவன் வழங்கிய
இயல்புகள் ஒரு பிரிவு.அது அவர்கள் மீது சுமத்தப்பட்ட
இறை கடமைகள் அடிப்படையிலானது
குழந்தைகள் வளரும் சூழலில் உண்டாகும்
குணாதிசயங்கள் ஒரு பிரிவு.இது அவரவரின்
குடும்ப சமூக பொருளாதரா கலாச்சார முறைகள் அடிப்படையிலானது.
இவை இரண்டிற்கும் இடையே அதிக
வேறுபாடுகள் உள்ளன.இவை குறித்த
சரியான அறிவை குழந்தைகளுக்கு
புகட்ட வேண்டும்.
இன்றைய எந்த பள்ளிக்கூடமும் பாடத்திட்டங்களும்
இந்த அறிவை கொடுப்பதற்கு தயாராக இல்லை.
ஆண் / பெண் இருவரும் முதலில் தங்களை
இறைவன் படைத்த நோக்கத்தையும்.... அவன்
அருட்கொடையாக தங்களுக்கு வழங்கியுள்ள
இயல்பையும் புரிந்து கொள்ள வேண்டும்
பெண்களிடம் மாற்றத்தை விரும்பும் ஆண்கள்
முதலில் பெண் குறித்த இந்திய சமூகவியல்
சார்ந்த ஆண் ஆதிக்க பார்வையை மாற்றி பரஸ்பரம்
மரியாதை கண்ணியம் என்ற இஸ்லாமிய பார்வைக்கு
திரும்ப வேண்டும்.
வளரும் சூழலில் உண்டாகும் குணாதிசயங்களை
இஸ்லாமிய பயிற்சியை கொண்டு மாற்ற இயலுமே
தவிர ஆண் / பெண் படைப்பு இயல்பை மாற்ற இயலாது.
பெரும் பெரும் பட்டங்களை பெறும் ஆண் / பெண்
இருவருக்கும் வாழ்க்கை குறித்த இந்த இஸ்லாமிய
புரிதல் வழங்கப்பட வில்லை என்றால்.....
முதலாளித்துவ கல்வியில் வெற்றி பெற்று
வாழ்க்கையில் தோற்று மன சிக்கலில் உழன்று
மறுமையிலும் சோதனைகளையே நமது பிள்ளைகள்
சந்திக்கும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval