Sunday, October 4, 2015

பூச்சிக்கொல்லி கலந்த உணவுப்பொருள்: சோதனையில் 'திடுக்' தகவல்கள் அம்பலம்


புதுடில்லி:நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனை யில், 12.5 சதவீத உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, விவசாயத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்களை கண்காணித்தல் திட்டம் 2005ல், துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2014 - 15ம் ஆண்டில், நாடு முழுவதும், 20 ஆயிரம் உணவுப்பொருள் மாதிரி கள் சேகரிக்கப்பட்டன. காய், கனிகள், பால், அரிசி, கோதுமை, இறைச்சி, முட்டை, டீத்துாள் உள்ளிட்ட பொருட்கள் சோதனையிடப்பட்டன. 'ஆர்கானிக்' எனப்படும், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள் விற்பனையகங்களில் பெறப்பட்ட பொருட்களும் சோதனையிடப்பட்டன. 

இந்தச் சோதனைகளில், 12.5 சதவீத உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்படாத, அசெபேட், பைபின்த்ரீன், அசெடாமிப்ரிட் போன்ற பல வகை, பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது கண்டறியப் பட்டது. உணவுப் பொருள் மாதிரிகளில், எம்.ஆர்.எல்., எனப்படும், அனுமதிக்கப்பட்ட எச்ச அளவுக்கு அதிகமாக, 2.6 சதவீத உணவுப் பொருட்களில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது. ஆர்கானிக் உணவுப் பொருட்களில் கூட, பூச்சிக் கொல்லி மருந்து களின் எச்சம் இருந்து தெரிய வந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval